பக்கம்:ஒரே முத்தம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஒரே முத்தம் புத்த:- நல்ல சங்கடம் உம்....,ஆகட்டும் புறப்படு. குமரி:- (புன்னகையோடு) மிக்க நன்றி. (பிரிகின் றனர்} காட்சி 19. 18. இடம்:- வசந்த மண்டபம். (விபீஷணனும்,சித்ராவும் மகிழ்ச்சியோடிருத்தல்) விபீஷ:- கடல் மடை திறந்ததுமாதிரி கர்ஜித்துவிட்டுக் கடிதங்களை எடுக்கப் பெட்டியைத் திறந்தான். அடடா! என்ன கம்பீரம்! என்ன களிப்பு! அத்தனையும் ஒரே நொடியில் இடி விழுந்ததுபோல் அழிந்துவிட்டன. சித்ரா! இனி முல்லைக்காட் டில் இவர்தான முடிசூடா மன்னர். என் ஆட்சி ஆரம்பம். சித்ரா:- இதுவரை நடந்ததும் உங்களாட்சிதா னே? விபீஷ:- இமயா ஒருவன் குறுக்கே இருந்தான். புத்தன் உதவியால் அவனைப் புதைத்துவிட்டேன். இனி விபீஷணன்விரும் பியபடியே இன்பபுரியின் ரத்ன சிம்மாசீனம். பக்கத்தில் நீ சித்ரா:- இன்னும் கெட்ட எண்ணம் உங்களை விட்ட பாடில்லை. விபீஷ:- அதிர்ஷ்டம், தானே வருகிறது சித்ரா! தோழி:- ஒற்றர் வந்திருக்கிறார். (ஒரு தோழி வந்து) விபீஷ-வரச் சொல். [1-வது காலி வருகிறான்] விபீஷ:- என்ன விசேஷம் முடிந்ததா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/72&oldid=1702689" இலிருந்து மீள்விக்கப்பட்டது