பக்கம்:ஒரே முத்தம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஒரே முத்தம் 1-வது கா:- தங்கமே தாங்க! சுருக்கமாகச் சொன்னா, ஒன்பது ரதியை ஒண்ணாச் சேர்த்தா எப்படி இருக்குமோ, அவ் வளவு ஒய்யாரமுங்க. விபீஷ:- ஆடவர்களை வசியப்படுத்தும் விபசாரி. அவள் அழகைப்பற்றி வர்ணனை. ஆமாம். அந்த ஆண் மூடனை இழுக் கும் அளவுக்கு அழகாகப் பேசுகிறாளோ? 1-வது கா:- பேச்சிலே கிளிங்க! அடடா! பேச்சா அது! விபீஷ:- அந்தப் பாசாங்குக்காரி,, பாடவும் கற்றிருப் பாள்...? 1-வது கா:- குயில் மாதிரி பாடுவாள். விபீஷ:- பெயர் என்ன சொன்னாய்? 1-வது கா:- பொன்னிங்க! மலையன் மகள் பொன்னி! விபீஷ: உம்; அவளையும், அவள் அப்பனையும் உடனே அழைத்து வாருங்கள். விபசாரம்! விபீஷணன் ராஜ்யத்தில் விப சாரம்! வரட்டும் பார்க்கிறேன் ஒரு கை. (1-வது காலி சென் றுவிடவே) விபீஷ:- பார்த்தாயா சித்ரா? இளவரசன் புத்தன, இன்ப வேட்டையாடுகிறானாம். பொன்னியாம் ஒரு விபசாரி, அவளோடு பொழுது போக்குகிறானாம். யார் தெரியுமா அந்தப் பொன்னி? பறையர் கிராமத்தலைவன் மலையன் மகள். தீண்டப்படாத வம் சத்துத்தேள்! அதன் விபசாரக்கொடுக்கை நறுக்க, ஆள் அனுப் பியிருக்கிறேன். சித்ரா :- இந்தச் செய்தி சுத்தப் பொய்! விபீஷ:- நீ சொல்லுவாய் என்று எனக்குத் தெரியும். எப் படிப் பொய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/74&oldid=1702691" இலிருந்து மீள்விக்கப்பட்டது