பக்கம்:ஒரே முத்தம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 73 சித்ரா:- இளவரசர் இம்மாதிரி காரியங்களில் உங்களைப் போலத் தலையிடமாட்டார். விபீஷ:- தலையிடமாட்டார். காலையிடுவார்! போ, போ, பைத்தியம். சித்ரா:- அப்படியே இருந்தாலும். பொன்னி ஒரு வேசி யாக இருக்கமுடியாது. புத்தனின் காதலியாக இருக்கலாம். விபீஷ:- எந்த எலியாக இருந்தாலும் சரி. இன்பபுரி சாம் ராஜ்ய சட்டப்படி, ஒரு இழிகுலப் பெண்ணை மேல் ஜாதி ஆடவர் கள் நேசிப்பது குற்றம். அதிலும் இளவரசன் நேசிப்பது மாபெருங் குற்றம். சித்ரா! நடக்கப்போவதைப் பார். பொறுத் திருந்துபார். 106 108 7809 (போய் வீடுதல், சித்ரா பெருமூச்சு விடுகிறாள்) காட்சி 20. இடம்:- மலையன் வீடு. (பொன்னி மோதிரத்தைப் பார்த்துப் பாடிக் கொண்டே புத்தனை நினைந்து உருகுகிறாள். ஏதோசுவடியைப் படித்துக்கொண்டிருந்த மலையன், அதைப் பார்த்துவிட்டு) மலை:- அம்மா! இந்த மோதிரம் ஏது? அப்பா. பங்கு பொன்:- அவர் கொடுத்தார் அப்பா. மலை: 'எவர் கொடுத்தார்? என்ன உளர்றே? The out பொன்:- அன்று என்னைக் காப்பாற்றினாரே, அவர். கும்க மலை:- அளவுக்கு மீறிவிட்டாய் பொன்னி. ஆபத்தை வர வழைத்துக்கொள்ளாதே! மிகக576

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/75&oldid=1702692" இலிருந்து மீள்விக்கப்பட்டது