பக்கம்:ஒரே முத்தம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பொன்:- என்னப்பா சொல்கிறீர்கள்? ஒரே முத்தம் மலை:- சொல்வது! கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போலச் சொல்லியும், நீ கெட்டுப்போகவே துணிந்துவிட்டாய். பொன்:- என் வாழ்வு கெடும்படி அவர் விடமாட்டாரப்பா! மலை:- உம். உன் தலையெழுத்தை யார் மாற்றமுடியும்? எங்கேயோ வழியிலே வந்தவன் அவராம், இவராம், விடமாட் டாராம்! பொன்:- வழியில் வந்தவரல்ல. அவர் யார் தெரியுமா? மலை:- யாராயிருந்தால் என்ன? உன் சாதியும், அவன் சாதியும் ஒத்துக்குமா? பொன் :- எங்கள் உள்ளங்கள் ஒத்துவிட்டன. மலை:- அப்படித்தான் முதல்லே அளப்பான்! அப்புறம் ஆள் போன இடந் தெரியாது போய்விடுவான். பொன்:- அவர் வாக்குத் தவறமாட்டார். மலை:- அரிச்சந்திரனாக்கும்! பொன்:- அரசகுமாரர் அப்பா! மலை:- அரச குமாரனா? ஆ! பொன்னீ! கெட்டாய்! அசத் தியம், அரச குடும்பத்தோடே பிறந்தது. பொன்:- அப்படிச் சொல்லாதீர்கள். அரசாட்சியின்மேல் சத்தியம் செய்திருக்கிறார். மலை:- அரசாட்சியாவது, 0 சத்தியமாவது. அத்தனையும் நடிப்பம்மா, நடிப்பு! அரசாட்சியின் மீது ஆணையிட இவர் யார்? அரசாங்கம் சாஸ்திர சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/76&oldid=1702697" இலிருந்து மீள்விக்கப்பட்டது