பக்கம்:ஒரே முத்தம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6- ஒரே முத்தம் காட்சி 1. இடம்:- இன்பபுரித் தெரு (இளவரசர் புத்தர் பிறந்தநாள் கொண்டாட்டம் ஊர்வலம் வருகிறது மக்கள் புத்தனைக்காண ஆவலாக ஓடி வருதல்) ஆ "இளவரசர் வாழ்க!" "எங்கே இளவரசர்?" (என்று கூவிக்கொண்டு வரும் மக்கள், மகிழ்ச் சிப் ஜெருக்கால் சீமான்கள்மேல் மோதிவிட. அவர்கள் வெறுப்பும் இறுமாப்புக் கொள் கின்றனர்) ஒரு சீமான்:- அறிவு கெட்டவர்கள், அடித்துவிரட்டுங்கள்! (ஒரு கிழவனின் மண்டையில் பலத்த அடிவீழ, அவன் அலறுகிறான்) புத்தன்:- நிறுத்துங்கள்! இது என்ன அக்கிரமம்? சீமான்;- நான்தான் விரட்டச் சொன்னேன். வெறிநாய் கள் மாதிரி வந்து விழுகிறார்கள். புத்தன்:- அதற்காக நாமும் அப்படி மாறிவிடுவதா? அது வும் மகிழ்ச்சிகரமான இந்த நாளில்! சீமான்:- சாதாரணப் பிரஜை, சமஸ்தானச் சீமான்களின் GLOW...... புத்தன்:- சாதாரணப் பிரஜை! அந்தப் பிரஜையின் ரத்த வியர்வைதான் பிரபுக்களின் மாளிகை, பிரபுக்களின் மகிழ்ச்சி, பிரபுக்களின் வாழ்வு! என்னைப் பார்க்க ஆவலுடன் ஓடிவரும் இந்தப் பாட்டாளிக்கு இதுதானா பரிசு? (என் று கிழவனிடம் நெருங்கி பரிவோடு) பெரியவரே! வருந்தாதீர். அறியாமல் கடந்துவிட்டது. இதை வைத்துக்கொள்ளுங்கள். (முத்துமாலை யளித்தல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/8&oldid=1702584" இலிருந்து மீள்விக்கப்பட்டது