பக்கம்:ஒரே முத்தம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓரே முத்தம் 79 மலைய:- கடவுளே! இதென்ன காலம்? என் மகள் விபசா ரியா? விபீஷ:- இல்லை, பதிவிரதை! சாஸ்திரப்படி இந்தக் குற் றத்திற்கு நரகலோக தண்டனை. சாம்ராஜ்ய சட்டப்படி மரண தண்டனை. பொன்:- எங்களைக் கொல்லும் ஆசையிருந்தால், அக்னி குண்டத்தில் போட்டாவது பொசுக்கிவிடுங்கள், இந்த அபாண்ட வார்த்தைகளால் கொல்லாதீர்கள். விபீஷ:- வேசி! வீரம் பேசுகிறாள். பொன்னீ! நீ பேசுவது அரசப் பிரதிநிதியிடம். அதை மறந்துவிடாதே. மலை - அரசராகவே இருக்கட்டும். அக்ரம வார்த்தைகளை ஒரு ஆண்டியும் கேட்டுக்கொண்டிருக்கமாட்டான். விபீஷ:- உம்... கேட்க வேண்டாம்! இந்த ஜந்துக்களிடம் பேசுவது என் கௌரவத்திற்கே குறைவு. இவனைக் கொண்டு போங்கள்! (சிப்பாய்கள் இழுத்துச் செல்லல்) பொன்:- அப்பா அப்பா!... விடு விபீஷ:- அப்பா!.. மாமா!... என்று அழை, (பொன்னி பொங்குதல்) பரந்த சாம்ராஜ்யத்தில் உங்கள் சாண் வயிறு நிரம்ப வேறு வழி இல்லையா? வாலிபத்தை வாடகைக்கு வதைக் காட்டிலும் வீட்டுக்கு வீடு பிச்சை எடுத்து வாழலாமே. (பொன்னி ஆத்திரம் உச்சம்) அழகு, இளமை இவைகளை ஆண் டவன் வியாபாரம் செய்யவா படைத்தான்? பொன்னி! உனக்கு மானம் என்று ஒன்று இருக்கிறதா? பொன்:- இல்லை! இருந்தால்...... இந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டாள். (வீபீஷணன் சிரிப்பு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/81&oldid=1702702" இலிருந்து மீள்விக்கப்பட்டது