பக்கம்:ஒரே முத்தம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் பொன்:- முதலில் இந்த எண்ணத்தை மறந்துவிடும். . 81 விபீஷ:- நீ வேசியல்ல' வைரச்சிலை! போதுமா? பொன்னி, நாதா!" என்று ஒரு அன்பச் சொல்லை உன் பொன்னதரங்க ளால் சிந்தினால் போதும், பூரித்துப் போவேன். புளகாங்கித மடைவேன். பிறகு உன்னைக் குடிசையில் வாழவிடமாட்டேன். கூடகோபுரங்களில் வாழலாம். அந்த மண் வீட்டை இடித்தெறி வேன். மாடமாளிகைகளில் உலாவலாம். ஏன்? உன்னை மகா ராணி யாக்கிவிடுவேன்! பொன்:- கனவு காணாதீர். காமவெள்ளத்தில் கருத்திழந்து உளறாதீர். கையில் சிக்கிவிட்டேன் என்பதற்காகக் கண்ணை மூடிக்கொண்டு பேசாதீர். விபிஷ:- பொன்னி! உன் உயிர் என் கையில்! பொன்:- மானம் பெரிது உயிரல்ல! நான் தமிழச்சி! விபீஷ:- நானும் தமிழன்தான். பொன்:- நீ.... தமிழினத்தில்... விபீஷணன்! விபீஷ:- மரியாதை கெட்டுப் பேசுகிறாய், மடநாயே! மானம் பெரிதாம். மானம்! எது பெரிது என்பதை இப்போது காட்டுகிறேன். . [உள்ளே சென்று மலையனை இழுத்து வருகிறான், வரும்போதே] று மலை:- பூச்சாண்டி காட்டாதீர்.பொன்னியை எமன் வாயில் ஒப்படைப்பேன். உமக்கு மனைவியாக்கமாட்டேன். விபீஷ:- வலியவரும் அதிர்ஷ்டத்தை, வேண்டாமென்ற தள்ளுகிறாய், மலையா!யோசித்துப்பார். மலை:. மலை:- யோசிப்பதென்ன! இதுதான் முடிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/83&oldid=1702704" இலிருந்து மீள்விக்கப்பட்டது