பக்கம்:ஒரே முத்தம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புத்த- எரிமலையின் குமுறல்! ஒரே முத்தம் விபீஷ:- எரிமலையைக்கூட வேரோடு பிடுங்கி எறியும் பூகம்பம் நான்! புத்த:- நீ தத்திக்குதிக்கும் தவளை. சிங்கநடை போடாதே! க விபீஷ:- தூணோடு சேர்த்துக் கடலில் மிதக்க விடுவேன். நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறிவேன். சதை சதைகளாகக் கிழித்து எடுப்பேன். புத்தா! உன் உயிர் என் கைவிரலில் இருக் கிறது. அளந்து பேசு. புத்த:- அளந்து பேசுகிறேன். இன்பபுரியின் இளவரசனைத் தூணில் கட்டிவிட்டோமென்ற இறுமாப்பில், வெறியாட்டம் போடுகிறாய்.... விபீஷணா! இதன் விளைவு விபரீதமாயிருக்கும். விபீஷ:- ஜோஸ்யரே! உமது ஜாதகத்தை முதலில் பார்த் துக் கொள்ளும். விளைவாவது, அறுவடையாவது, விபீஷணன் பாதையில் வெற்றியைத்தவிர வேறு எதுவும் கிடையாது.புத்தா! நீ சிறுவன். அரசாங்கம் என்றால் என்னவென்றே அறியாதவன் இந்த லட்சணத்தில், நீ துப்பறியக் கிளம்பினாய். பார்! துப்பு கெட்டவனே! D புத்த:- துரோகி! நாக்கை மடக்கு. விபீஷ:- மடக்காமல் பேசமுடியுமா? மடக்கித்தான் பேசு கிறேன். மடமையின் சிகரமே! மதிகெட்ட மன்னனுக்குப் பிறந்த மண்டூகமே! னுடைய புத்த: விபீஷணா! நீ ஓணான் குஞ்சு! ஒதிய மிளார். என் உணர்ச்சி அலைகளையும், தூணில் கட்டிவிட்டதாக எண்ணி உளறுகிறாய். என் உணர்ச்சி வெள்ளத்தின் முன், இந்தத் தூண் ஒரு துரும்பு! ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/90&oldid=1702712" இலிருந்து மீள்விக்கப்பட்டது