பக்கம்:ஒரே முத்தம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் புத்த:- வேண்டாம்! வேண்டாம்! 91 விபீஷ:- உம். எழுது. (எழுதும் மடலை, புத்தன் வாங்கு கிறான்) அன்புள்ள யாளிதத்தருக்கு...... உம். சீக்கிரம் எழுது. (புத்தன் எழுதுகிறான்) புத்தன் எழுதிய அவசர அழைப்பு. இம் மடல் கண்டதும், இமைகொட்டும் நேரம்கூடத் தாமதியாமல், வரும் வீரனோடு வந்து சேரவும். சில முக்யமான ஏற்பாடுகள் உடன் செய்யப் பட வேண்டியிருக்கின் றன. உம்... கையெழுத்துப் போடு. புத்த:- இந்த ஓலை எதற்காக? விபீஷ:- உன் நன்மைக்குத்தான். புத்த:- என் நன்மைக்கா? விபீஷ:- பேசாதே! வாள் முனை கட்டளை இடுகிறது. அதற்கு வணங்கு. புத்த:- வணங்காவிட்டால்? விபீஷ:- பொன்னி வானுலகம் செல்வாள். (வாளை உருவி அவன் பக்கம் நீட்டவே) புத்த:- நிறுத்து! நிறுத்து. விபீஷ- உம் வா வழிக்கு! போடு கையெழுத்தை. (புத்தன் கையொப்பமிடல். அதை ஒரு சிப்பா யிடம் கொடுத்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/93&oldid=1702719" இலிருந்து மீள்விக்கப்பட்டது