பக்கம்:ஒரே முத்தம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஒரேமுத்தம் சங்க காட்சி 25. 2பு இடம்: வீபீஷணன் மாளிகை. (பொன்னி, புத்தன் கட்டப்பட்டிருக்கிறார்கள். விபீ ஷணன் நின்று கொண்டிருக்கிறான். சிப் பாய்கள் சிலரால், யாளிதத்தர் அழைத்து வரப்படுகிறார்) விபீஷ:- யாளிதத்தரே! வருக, வருக. யாளி:- (புத்தனைக் கண்டதும்) ஆ! இளவரசரே! யார் செய்த அநியாயம் இது? விபீஷணரே! என்ன விபரீதம்? நான் விபீஷ:- பொறும். பொறுத்தார் பூமி ஆள்வார். கூடப்பொறுத்திருந்தேன் இப்பொழுது பூமி ஆளப்போகிறேன். யாளி:- பேச்சைக் கேட்க நேரமில்லை (வாளை உருவுதல். சிப்பாய்கள் யாளிதத்தரை வளைத்துப் பிடித்தல்) வ விபீஷ:- எனக்கும் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை உம். சீக்கிரம்! (யாளிதத்தர் தூணில் கட்டப்படல். விபீஷணன் ஒரு மடலை எடுத்து யாளிதத்தரிடம் நீட்டி) யாளிதத்தரே! நான் சொல்லிக்கொண்டேயிருப்பேன். நீர் எழுதிக்கொண்டேயிருக்க வேண்டும். யாளி:- எலி, புலிக்கு ஆணையிடுகிறது. ராஜத் துரோகி! உன் வார்த்தையைக் கேட்டு என் விரல்கூட அசையாது. விபீஷ:- உன் ஆத்மாவையே அசைக்கிறேன் பார் (சிப் பாய்களிடம்) ஏய்! ஆளுக்கொரு வாள் எடுங்கள். உம், என்ற தும் புத்தன் தலை உருள வேண்டும். (வாளை உருவியபடி,புத்தன் தலைக்கு நேராக நீட்டிக்கொண்டு சிப்பாய்கள் நிற்கின்றனர்) என்ன யாளிதத்தரே! இப்பொழுது என்ன சொல்லுகிறாய்? இள வரசரின உயிர் என் உதடுகளின் அசைவில் இருக்கிறது. சொல் ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/96&oldid=1702722" இலிருந்து மீள்விக்கப்பட்டது