பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஆகவே, ஒவ்வொரு அரசும் தங்கள் குடிமக்களைப் பலம் வாய்ந்தவர்களாக மாற்ற முயன்றது. அதற்குத் துணை தரும் உடலழகுப் பயிற்சிகளை உற்சாகத்துடன் செய்து, உடலை வளர்க்கத் தூண்டியது தங்களைக் காத்துக்கொண்டால் தானே பிற நாடுகளையும் அடக்கித் தலைமை ஏற்க முடியும் ! ஆகவே, தற்காப்புக்காகவும், தாய் நாட்டைக் காக்கவும் பெற்ற உடல்வளத்தில் விளைந்த திறமையை, வெளிப்படுத்த விரும்பினர். அதற்கு மேடையாக அமைந்ததுதான் இந்த ஒப்பற்ற ஒலிம்பிக் பந்தயங்கள்.

ஒப்புவமை இல்லாத ஒலிம்பிக் பந்தயம் கிரேக்க மக்களை எத்தகைய - நிலையில் வாழச்செய்து வாழ்வில் மிளிரச் செய்தது, என்பதை இனி வரும் பகுதிகளில் காண்போம்.