பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவ்வாறு அந்நியப் படையெடுப்பால், ஒலிம்பியா , பதிப்பட்டபொழுது, ரோமை ஆண்ட மன்னன் இரண்டாம் தியோ டசிஸ் இட்ட ஆணையால். எல்லாக் கோயில்களும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. கண்ணுக்குத் தோன்றக்கூடிய சான்றுகள் எல்லாம் காவலர்களால் அழிக்கப்பட்டன. கோயில்கள் மட்டும் இடிபடவில்லை கோயிலின் முன்னே அமைந்திருந்த சுற்றுச் சுவர்கள் அனத்தையும் இடித்துத் தரைமட்டமாக்குமாறு மன்னன் கொடுத்த கட்டளை சிறப்பாக நடந்தேறியது. 45000, 50000 மக்களுக்கு மேல் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கும் அளவுக்குச் சுற்றி வளைத்துக் கட்டப்படட் ஒலிம்பிக் பந்தய மைதானமும். அதனைச் சார்ந்த மதில்சுவர்களும் மண்மேடாயின.

இந்தக் கொடுமையைக் கண்ட இயற்கைக்கே பொறுக்க வில்லை போலும். தானும் தன் கை கைவரிசையைக் காட்டக் தொடங்கியது , சீயஸ் கோயிலே நெருப்பு எரித்துப் பொசுக்கியது. ஒரு நூற்ருண்டுக்குப் பிறகு, அங்கே எழுந்த +b கம்பத்தால். என்சியிருந்த இடங்களும், மறைந் தொழிந்து மண்ணுள் அடங்கின. சுவடே இல்லை. சான்றுகள் எங்கே இருக்கப்போகின்றன! வரலாற்றுக கருவூலங்களே பூகம்பம் :ம்ட்டும் புதைக்கவில்லை........புனிதமான ஆலிவ் மங்களை வளர்த்த புனிதமான ஆல்பி பஸ் ஆறும் பொங்கியெழுந்து பெரு வெள்ளத்தைக் கொண்டு வந்து மீதியிருந்த மண் மேட்டையும் கரைத்து, சாதாரணத் தரையாக மாற்றி அமைதி கொண்டது. அழகுபடுத்திய ஆறே அந்த இடத்தை அழித்து ஆறுதல் அடைந்தது.

அழகான பள்ளத்தாக்கிலே, ஒப்புயர்வற்ற ஒலிம்பியா பகுதியிலே அதற்குப் பிறகு கோயிலும் இல்லை. குடியிருப்பும் இல்லை. இறைவனை வணங்கவும் அதைப் பற்றி நிகணக்கவும் யாரும் இல்லை மனிதனைக் கொண்டு வளர்த்தது காலமே மனிதனைக் கொண்டு. வசிக்க