பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

103


முகுந்தனும் விநோதினியும் வாசல் வரை வந்து அப்பாவிற்கு கை அசைத்துக் காட்டி வழியனுப்பினர். கார்த்திகேயன் தன் மக்களைப் பார்த்தபடி சென்றார்.

‘அக்கா! அப்பாவிடம் என்ன வாங்கி வரச் சொன்னாய்?’ என்று கேட்டான் முகுந்தன்.

“அதை இப்பொழுது சொல்ல மாட்டேன். பள்ளிக்கூடம் போய் வரும்பொழுது சொல்கிறேன்’ எள்றாள் விநோதினி.

விநோதினி தன் தம்பிக்கும் தனக்கும் பகல் உணவு எடுத்துக் கொண்டாள். முகுந்தனை அழைத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டாள்.

“முகுந்தன்! முகுந்தன்!” என்று ஆசிரியர் அவனை அழைத்தார்.

முகுந்தன் பயந்து கொண்டு எழுந்து நின்றான். மற்ற மாணவர்கள் அனைவரும் அவனைப் பார்த்தனர். ஆசிரியர் என்ன கேட்கப் போகிறார்? வீட்டுப் பாடத்தை இன்னும் முடிக்காமல் இருக்கிறேன். அதைக் கேட்டால்?’ என்று நினைத்தான். அவன் உடல் வியர்த்தது.

“முகுந்தா! உன்னைத் தலைமை ஆசிரியர் வரச் சொல்லி இருக்கிறார். அவரைப் போய்ப் பார்: என்று கூறினார் ஆசிரியர்.