பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

பூவை எஸ். ஆறுமுகம்

சமயம் தாயின் ஏக்கத்தால் இவன் ஏங்குகிறான் என்று நினைத்து, அவன் கவனத்தை வேறுபக்கம் திருப்புவார்.

விநோதினி முகுந்தனுக்குப் பாடம் சொல்லிக், கொடுக்கும்போதும் அவன் அம்மாவின் படத்தைப் பார்ப்பான், அதனால் விநோதினி தன் தாயின் படத்தை அவன் பார்க்காத இடத்தில் மறைத்து வைத்தாள்.

முகுந்தனுக்குக் காய்ச்சல் வந்தது. அப்பொழுது அவன் “அம்மா! அம்மா!” என்று கதறிக் கொண்டே அழுதான். விநோதினி மறைத்து வைத்த அம்மாவின் படத்தை அவனிடம் கொண்டுவந்து காட்டினாள். முகுந்தன் அந்தப் படத்தைப் பார்க்க வில்லை.

முகுந்தன் நன்றாகப் படம் வரைவான். அவன் பள்ளிக்கூடத்தில் ஒவியப்போட்டி நடந்தது. அப்போட்டியில் பல பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வந்து கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமான படங்களை வரைந்தனர். முகுந்தன் தன் தாயின் படத்தை வரைந்தான். அவன் வீட்டில் பார்த்த படத்தை, பார்ப்பவர்கள் அதிசயிக்கும்படி வரைந்திருந்தான்.

போட்டியின் நடுவர்கள் மாணவர்கள் வரைந்த ஒவியப்படங்களைத் தேர்ந்தெடுக்கக் கூடினர். பல-