பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பூவை எஸ். ஆறுமுகம்


தியாகி சிவசிதம்பரம் அந்தப் பங்களவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, சில தினங்களுக்கு முன்னதாக நடந்த சம்பவம் ஒன்று அவர் நினைவில் எழுந்தது,

பழைய இல்லத்தில் உட்கார்ந்து பெண்டு பிள்ளைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம் அது.

சிவசிதம்பரத்துக்கு நான்கு பிள்ளைகள்.

தசரத மகாராஜாவுக்கு இருந்தார்களல்லவா அப்படி!

மூத்தவன்: காமராஜ்
இரண்டாமவன்: மோகன்தாஸ்.
மூன்றாமவன்: நேரு,
நான்காமவன்: குமரன்.

அவர்கள் நால்வருடனும் மனையாட்டி நாகம்மையுடனும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் “பங்களாவுக்குப் பெயர் என்ன வைக்கலாம்?” என்று ஒரு கேள்வியைப்போட்டார் அவர். கேள்வி கேட்டுவிட்டு, அவர் தன்பாட்டில், அன்றையப் பத்திரிகையில் மூழ்கலானார். அப்போது, பிரதமர் லால்பகதுர்சாஸ்திரி தாஷ்கண்டிலிருந்து வந்தார். பாரதத்தின் சீலத்தை உயர்த்த அறவழித்துது மேற்கொண்டு அதன் விளைபலனாக பாகிஸ்தான்.