பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

பூவை எஸ். ஆறுமுகம்


பல்வேறு கட்சித் தலைவர்களிடமிருந்தும் வந்திருந்த வாழ்த்துச் செய்திகளை மனைவியிடம் கொடுத்துவிட்டு, சிவசிதம்பரம் கதர்த்துண்டு காற்றில் பறக்க, வேகமாக விரைந்தார். அடுத்த. புதினைந்தாவது நிமிஷம் அவர் தமது புதுமனைக்குத் திரும்பினார். தம் அருமைத் துணைவியிடம், “நாகம்மை புறப்படு. பிள்ளைகளையும் அழைத்துக் கொள். நமது பழைய வீடுதான் இனி நமக்குக் சதம். இந்தத் 'தாஷ்கண்ட் வீடு’ தான் இனி இவ்வூர் காந்தி உயர்நிலைப்பள்ளி”... பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆபத்துக்கு உதவும் பேற்றை நமது வீடு அடைந்திருக்கிறது. அதற்காக நாம் எவ்வளவோ பெருமைப்பட வேண்டும்!” என்று உணர்ச்சிப் பெருக்கின் விம்மிதத்துடன் மொழிந்தார், சிவசிதம்பரம் அவர்கள்.

“தியாகி சிவசிதம்பரம் அவர்களுக்கு ஜே!” என்ற கோஷங்கள் விண்முட்ட எழத்தொடங்கின.