பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

53


சிவபிரான் சாகாமல் நிலைபெற்றிருந்தாற்போல, நீயும் நிலைபெற்று வாழ்வாயாக!...” என்று வாழ்த்தினாள்.

“தமிழ்த் தெய்வமே! நெல்லிக்கனியை உண்ணாமலேயே, நான் சாவை வென்றவனாகி விட்டேனே, தங்களது அமுதப் பாடல் மூலம்: இந்த ஒரு பாக்கியத்தைப்பெற நான் என்ன தவம் செய்தேனோ? ஆஹா, உங்களது கருணையே கருணை!” என்று உணர்ச்சி வசப்பட்டான் அதியமான்.

ஆம்; அதியமான் நெடுமான் அஞ்சியும் ஒளவைப் பிராட்டியைப் போன்று தமிழ் இலக்கியத் தில் என்றென்றும் நிலைபெற்று விட்டவனே அல்லவா?