பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஒளிவளர் விளக்கு

வாழ்வில் பயன் இல்லை என்று தெரிந்துகொண்டார்கள். புற வாழ்வில் மனம் ஈடு படப் பட அது இன்னும் விரிந்து கொண்டே போகும். ஆசை என்னும் பாதையை அமைத்து உலக முழுவதும் உலவி, அதனல் வரும் துன்பங்களைப் பெற்று, மேலும் மேலும் கவலைகளுக்கு ஆளாகி விடு கின்றது மனம். அதற்கு மாருக மனத்தை உள்ளே செலுத்தி, ஆழமாகச் செலுத்தி, இறைவனுடைய திரு வருளே கினேந்திருந்தால் அது அமைதி பெறுகிறது. இப்படி மனத்தில் அமைதியைப் பெறுவதற்கு வழி காட்டுவது இறைவனுடைய திருவருள். அவன் திருவருளேப் பெறு வதற்கு அவனே வணங்கவேண்டும். இறைவன் மனத்திற்கும் அப்பாற் பட்டவன். ஆனலும் உலகத்திலுள்ள மக்கள் உய்வதற்காகத் திருக்கோயில்களிலே மூர்த்திகளாக எழுங் தருளியிருக்கிருன். அருளே கண்ணுகக் கண்டவர்களுக்குத் தன் திருவுருவத்தைத் தோற்றுவித்துப் பிறரும் அதை வணங்கும்படி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிருன். அத ல்ைதான் இந்த காட்டில் எங்கே பார்த்தாலும் கோயில் கள் இருக்கின்றன.

கோயில்களில் இறைவனுடைய பல வகைத் திருவு ருவங்களே அமைத்திருக்கிருர்கள். தினந்தோறும் பூசை முதலியன நடத்துகிருர்கள். ஊரில் உள்ள மக்கள் அத்தனை பேரும் வந்து சார்ந்து இறைவனைப் பணியும்படியான அமைப்புக்கள் எல்லாம் கோயிலிலே இருக்கின்றன. அவர்கள் அமைதி பெற்று வாழ்வதற்குரிய இடமாகக் கோயில் விளங்குகிறது. அந்த அமைதி இல்லாதவர்கள் வாழ்க்கையில் இன்பத்தைக் காண முடியாது; அதனல் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று பெரியோர்கள் பேசுகிருர்கள்.

திருக்கோயில் இல்லாத திருவில் ஊர் என்று திருநாவுக் கரசர் சொல்லுகிருர். கோயிலில் எழுந்தருளியிருக்கிற