பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஒளிவளர் விளக்கு

தெளிகின்றபோது அம் மண் வேறு எங்கும் போகாமல் அந்த நீருக்கு அடியிலேதான் கிடக்கிறது.

இறைவன் மக்கள் நெஞ்சத்திலே இருக்கிருன்.அங்கே அவன் எப்படியோ புகுந்து கொண்டான். அவனுடைய கருணை மழைதான் அதற்குக் காரணம். ஆனல் நெஞ்சிலே தெளிவில்லாமையால் இறைவன் உள்ளமாகிய தாமரையில் எழுந்தருளியிருக்கிருன் என்பதை உணர முடிவதில்லை.

பக்தி உண்டாகி அறிவு சிறந்து ஒருவனுக்குத் தெளிவு ஏற்படுகிறது. அப்போது தன் கெஞ்சிலே இறைவன் கோயில் கொண்டிருப்பதை அவன் உணர் கிருன். அதுகாறும் இறைவன் அவ்விடத்தில் கலந்திருக் தாலும், தெளிவின்மையால் அவன் இருப்பது புலனுக வில்லை. இப்போது கலக்கமின்றித் தெளிந்தமையால் இறைவன் தன் நெஞ்சிற் புகுந்து நிற்றலை உணர்கிருன்.

கருவூர்த் தேவர் பக்தர்களுடைய அநுபவமாகிய இதைச் சொல்கிருர்: ஓர் அன்பர் இறைவனைத் துதிப் பதாக வைத்துச் சொல்கிருர். -

கலங்கல்அம் பொய்கைப் புனல்தெளி விடத்துக்

கலந்தமண் இடைக்கிடத் தாங்கு தலங்கலந்து அடியேன் சிந்தையுள் புகுந்த

தம்பினே ! (கலங்கலையுடைய அழகிய பொய்கையிலுள்ள நீரானது தெளியும் காலத்தில் அதில் கலந்திருந்த மண் அவ்விடத்தில் தனியே தோற்றிக் கிடந்ததுபோல, அருளாகிய கலத்தோடு கலந்து அடியே னுடைய கெஞ்சில் புகுந்த இறைவனே! - அம்-அழகிய இடை-இடம். கிடக்தாங்கு * கிடந்தது போல. கம்பன் - அடியவர்களுடைய விருப்பத்துக்கு உரியவன்.)

இறைவன் புதிதாகச் சிந்தையுட் புகவில்லை. அவன் எப்போதும் அதனூடே இருக்கிருன். ஆளுல் அவன் இருப்பது மற்றச் சமயங்களில் தெரிவதில்லை. சிங்தை