பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஒளிவளர் விளக்கு

என்றது, இந்தப் பித்து கிலேயே எம்மை வாழ்விப்பது என்ற கினே வில் எழுந்தது. கூறுதும்-கூறுவோம்.)

புவனமெங்கும் கிறைந்து அதற்கு அப்பாலும் கடந்து நிற்கின்றவன் இறைவன். அவன் கருணையில்ை உலகுக் குள் நடையாட உருவம் பெற்று வந்து, தில்லையென்னும் ஊருக்கும் வந்து, அம்பலமென்னும் மண்டபத்துக்குள்ளும் புகுந்தான். எல்லேயின்றி விரிந்த பரம்பொருள், எல்லைக் குட்பட்ட இடத்திற் சுருக்கிக் கொண்டு வந்தது, அப் பொருளின் கருணேயைக் காட்டும் செயல். அப்படி வந்த மையால் புவனியில் இன்னர் இனியாரென்னது யாவரும் உய்ய வழி பிறந்தது. இறைவனுடைய அருளேயே சக்தி யாக வைத்து வழிபடுகிருேம். அந்த அருள் வெளிப்படை யாகத் தோற்றிப் பொங்கி வழிந்ததுபோல, உமையாள் அன்ன நடை கடந்து எம்பெருமானுடன் வந்தாள். அவளும் வந்தமையால்தான் உயிர்கள் அருளேப் பெற்றன. அதனல், 'அன்ன நடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள் புரிந்து' என்று சொன்னர்.

"மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே, கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே” என்று மணி வாசகர் கூறியபடி, 'பின்னேப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தன்” என்று இவர் பாடுகிரு.ர்.

ஒரு பொருளின் பெருமையை உணர்ந்து வியப்பில் ஆழ்ந்தால் உடன் இருப்போரையும் கைதட்டி அழைத்து, "பாருங்கள், பாருங்கள்' என்று சொல்வது மனித இயல்பு. ஆதலின் சேந்தனர் இறைவனுடைய கோலத் திலும் கருணையிலும் மனம் ஆழ்ந்து உருகி வியந்து, 'வாருங்கள்; வாழ்த்துங்கள்” என்று கூவி அழைக்கிரு.ர்.

சேந்தனர் பாடிய திருப்பல்லாண்டு பதின் மூன்று பாசுரங்களே உடையது. இது முதற் பாசுரம்.