பக்கம்:ஓங்குக உலகம்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

ஓங்குக உலகம்


வும் அண்ணா அவர்களின் முதல் தொண்டராகவும் அண்ணாவின் நண்பர்களுக்கு உற்ற நண்பராகவும் விளங்கினார்.

பின் நான் திரு.வி.க. உயர்நிலைப் பள்ளியினை ஷெனாய் நகரில் தொடங்கிய காலத்து, அவரை அணுகி நின்றபோது, உடனே ஐயாயிர ரூபாய்க்கு ஒரு காசோலை தந்து வாழ்த்தி அனுப்பினார். பின் 1958ல் பள்ளிக்கு வந்து வாழ்த்தியு முள்ளார். அப்படியே நான் பச்சையப்பரில் பணியாற்றியபோது, இயல், இசை நாடகப் போட்டிகளுக்குச் சுழற் கோப்பைகளும் பரிசுகளும் நிறுவிய போது ஓரங்க நாடகப் போட்டிக்கு மிக உயரிய சுழற் கோப்பை ஒன்றையும் செலவுக்கென வைப்புநிதியினையும் அளித்ததோடு, எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி, முதலாண்டு விழாவில் தலைமையேற்றும் வாழ்த்தியருளினார். இப்படியே கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிய வள்ளலாக அவர் வாழ்ந்தார். வாழ்கிறார்.

திரு டாக்டர் மு.வ. அவர்கள் மறைந்த நாளன்று, இவர் முன்பே வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றாலும், பின் சுடுகாட்டிற்குத் திரும்ப வந்தார், கடைசியாக மரியாதை செலுத்துவதற்கு. எனினும் இவரைக் காணவே பெருங்கூட்டம் கூடினமையால் சிதை அருகேயும் செல்லாமல், தள்ளி இருந்த என்னைக் கட்டித் தழுவி தம் ஆறுதலைச் சொல்லி அகன்றார். தமிழ் வளர, தமிழர் நிலை உயர இவர் செய்தன பல-பலப்பல.

1977இல் இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகு இவர் செய்த தொண்டினை நாடறியும். தமிழ் அறிவும் மேலும் அறியவேண்டும் என்ற அவாவும் உடையவர் இவர். ஒருநாள் காலை இவர் வளர்ப்பு மகள் திருமதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/105&oldid=1127781" இலிருந்து மீள்விக்கப்பட்டது