பக்கம்:ஓங்குக உலகம்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவு கட்டி விடாதீர்கள்

117


நல்ல ஊர்கள் தத்தம் பழந்தமிழ்ப் பெயர்களோடு வாழ வழி செய்கின்றது. இவ்வாறே எல்லாத் துறையும் காக்கும் கடமையில் தமிழினம் செயலாற்ற வேண்டும்.



17. முடிவுகட்டி விடாதீர்கள்!

மாணிக்கவாசகர் தம்மை மறந்த அடியவர். நன்றும் தீதும் ஆண்டவன் தந்தவை என உணர்பவர். அவர் பாடிய பாடல்கள் உலக உயிர்களை உய்விக்கும் திறனுடையவை. சிற்றின்பத்தில் வாழும் நல்லுயிர்களை அவ்வுயிர் வாழ்விலே வாழ வைத்து, அவ் வாழ்வுக்கு இடையிலேயே பேரின்பமாகிய வீட்டையும் காட்டிய வித்தகர் மணிவாசகர். அவர் பாடிய திருவாசகத்தில் இவ்வுண்மையை நன்கு கண்டு உணரலாம். ஆயினும் இவ்வுண்மையை நன்கு வெளிப்படையாக உலகுக்கு உணர்த்தவே அவர் திருக்கோவையாரைப் பாடினார்.

சிற்றின்பமாகிய உலக வாழ்வையும் பேரின்பமாகிய வீட்டு வாழ்வையும் பின்னிப் பிணைத்துச் செல்லும் நூல் திருக்கோவையார். இக் கோவையுள் இரண்டையும் இணைத்து அவர் பாடிய ஒரு பாடல் சிந்தைக் கினிய பாடலாகும்.

உணர்ந்தார்க் குணர்வறியோன்
தில்லைச் சிற்றம்பலத் தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்
செவ்வாய் இக்கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந்தொறும்
பெரும்போகம் பின்னும் புதிதாய்
மணந்தாழ் புரிகுழலாள்
அல்குல் போல வளர்கின்றதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/120&oldid=1135829" இலிருந்து மீள்விக்கப்பட்டது