பக்கம்:ஓங்குக உலகம்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

ஓங்குக உலகம்


தென்பதும் அதையே பிற நாடுகள் கடனாகப் பெற்றன என்பதும் உறுதியான மறைக்கமுடியா உண்மை. காகிதம் செய்யும் திறன் சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பே நிறை வளர்ச்சி பெற்றிருந்தமையின் தன் கண்டுபிடிப்பின் திறன் முற்றிய நிலையிலேயே, சீனா அதை உலகுக்கு வழங்கியது எனக் கொள்ளப் பொருந்துவதாகும்.



19. எத்தனை அகத்தியர்?

மிழ்நாட்டிலும், வடநாட்டிலும் அகத்தியரைப் பற்றி எத்தனையோ கதைகள் வழங்குகின்றன. அத்தனையும் உண்மை என்று கொள்ளவோ வரலாற்றிற்குப் பொருந்தியன என்று கொள்ளவோ வழி இல்லை. அகத்தியரைத் தெய்வங்களோடு சேர்த்துக் கூறும் கதைகளும் உள்ளன. சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழையும் பாணினிக்கு வடமொழியையும், கற்றுக்கொடுத்தான் என்றும், அவ்விருவர் வழியேதான். இரண்டு மொழிகளும் உலகில் தோன்றின என்றும் கதைகள் கூறுகின்றன. தத்தம் மொழிகளைத் தெய்வ மொழிகள் என்றும் உயர்ந்த மொழிகள் என்றும் கூறிக்கொள்ள நினைத்தவர் எழுதியவையே அவை. மேலும் மொழியின் தோற்ற வளர்ச்சியை ஆராயும் இன்றைய மொழிநூற் புலவர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

அகத்தியர் என்ற உடனே தோற்றத்தில் மிகச் சிறியதாகிய உருவம் தோன்றுதல் மரபு. புராண அகத்தியர் மிகச் சிறியவராக உருவத்தில் இருந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/147&oldid=1135837" இலிருந்து மீள்விக்கப்பட்டது