பக்கம்:ஓங்குக உலகம்.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எத்தனை அகத்தியர்?

149


திருமாலின் அவதாரமே எனக் கொண்ட அகத்தியர் அவ்விராமனை அங்கேயே தம்முடன் தங்கி விடுமாறு வேண்டுகிறார். அவரொடு அத் தண்டகாரணியத்தில் வாழ்ந்த பிற தவசிகளும் அவ்வாறே வேண்டுகின்றனர். என்றாலும் இராமன் அவர் வேண்டுகோளுக்கு இசையவில்லை. அவர்களுடன் சில நாள் தங்கியிருந்த பிறகு, தெற்கு நோக்கி இராமன் மற்ற இருவருடன் புறப்பட்டு விடுகிறான். அகத்தியரோ மற்ற முனிவர்களோடு அங்கேயே தண்டகாரணியத்தில் தங்கி விடுகின்றார். அதுவே அவர்தம் நிலைத்த இடம் என்பதும் இதனால் தெளிவாகின்றதன்றோ?

இத் தண்டகாரணியம் விந்திய மலைச் சாரலைத் தன்னுட் கொண்டது. விந்தியம் தடுத்தது என்ற கந்த புராணக் கூற்று மெய்யாக, வட நாட்டிலிருந்து வந்த அகத்தியர் மேலும் செல்ல விரும்பாமல் அங்கேயே தண்டக வனத்தில் தங்கிவிட்டார் எனக் கொள்வது பொருந்துவது ஆகும். இராமாயணத்தின்படி, இராமன் சற்றே பின்னும் தெற்கு வந்து விந்தியத்தின் தென் பாலுள்ள பஞ்சவடியில் தங்கியிருந்தான். அக் காலத்தில் தான் இராவணன் சீதையை எடுத்துக் கொண்டு சென்றான் போலும். தண்டகவனத்தில் ஓர் அகத்தியரைக் காட்டிய கம்பர் தெற்கே நெடுந்தொலைவில் பொதிய மலையில் வாழ்ந்த மற்றொரு அகத்தியரையும் காட்டத் தவறவில்லை. எங்கே எப்படிக் காட்டுகிறார்?

தண்டக வனத்தில் அகத்தியரைவிட்டுப் பிரிந்த பின் இராமன் தெற்கே வந்து பஞ்சவடியில் தங்கிய பின் சில நாட்கள் கழிகின்றன. பின்பொருநாள் இராவணன் வந்து சீதையைத் தூக்கிச் செல்கிறான். அதனால் மனமுடைந்து போன இராமனும் இலக்குவனும் மேலும் தெற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/152&oldid=1127928" இலிருந்து மீள்விக்கப்பட்டது