பக்கம்:ஓங்குக உலகம்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. இலக்கிய நெறி


19. வள்ளுவர் வகுத்த அரசு

ள்ளுவர் உலக அறிஞர்; அவர் வகுத்த அறநெறியும் சமுதாய அமைப்பும் எந் நாட்டிற்கும் எக்காலத்துக்கும் பொருந்தியவை. அவர் எழுதிவைத்த 1330 குறட்பாக்களைப் பொருள் கருதி அறம், பொருள், இன்பம் எனப் பாகுபடுத்தி, 133 அதிகாரங்களாக்கி என்றென்றும் வாழ வைத்தனர் அறிஞர். சிலர் வள்ளுவரே அவ்வாறு பகுத்தனர் என்பர். ஆயின் உரையாசிரியர் தம் குறள் வைப்புமுறையில் மாறுபாடு காண்பது பொருந்தாது. எப்படியாயினும் வள்ளுவர் குறள் வையத்தை வாழ வைக்கும் பொதுமன்ற என்பதை யாரும் மறுக்க இயலாது.

அறத்தாறு பொருள் ஈட்டி, இன்பம் துய்ப்பதே உயிரினத்தின் அடிப்படைப் பண்பாடு. இந்த அடிப்படையிலேயே குறள் அமைகின்றது. இவற்றுள் இடையில் உள்ள பொருட்பாலிலேயே ‘அரசு’ பற்றிய கருத்துக்கள் அமைகின்றன. ‘அரசு’ என்றதும் ‘வள்ளுவர்’ முடியாட்சியைப் பற்றித்தானே..சொல்லுகிறார்; எனவே இன்றைய குடியரசைப் பற்றி அவர் சொல்லவில்லையே’ எனச் சிலர் வாதிப்ப்ர். ஆனாலும் உற்று நோக்கின் அவர் வகுக்கும் அரசியல் நெறி என்றைக்கும் பொருந்துவதாக அமையும். இன்றைய ஆட்சி மக்களாட்சி; ஆளுகின்றவர் அமைச்சர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/155&oldid=1135839" இலிருந்து மீள்விக்கப்பட்டது