பக்கம்:ஓங்குக உலகம்.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

ஓங்குக உலகம்


என்றும், இயற்கையும் நிலைகெடும் என்றும் சொல்லுகிறார். எனவே மன்னன் வாழ்விற்கும் மாநிலச் செழிப்பிற்கும் மற்றுள்ள எல்லா வளங்களுக்கும் அடிப்படை குடிமக்களே என்று உணர்தல் வேண்டும்.

தலைவராவர் தன்மைகளை மேலும் பல அதிகாரத்தில் வள்ளுவர் விளக்குகிறார். அவ் விடங்களிலெல்லாம் ஒருமையே எடுத்தாளப் பெறுகின்றது. பின்வரும் அமைச்சர் பலராயினும் மக்கள் கோடிக் கணக்கில் இருப்பினும் தலைவன் ஒருவன்தானே இருக்க முடியும். எனவே இந்த உண்மையையும் அதனால் காட்டுகின்றார். வழிவழியாக வரும் மன்னர் பரம்பரையிலேயும் தகாதவர் ஆட்சிக்கு வந்தால், அவரை விலக்கித் தக்காரை ஆட்சி பீடத்தில் அமரச் செய்த சிறப்பு அன்றைய கரிகாலன் வரலாற்றால் அறிகின்றோம். ‘ஐம்பெருங் குழு’வே ஆட்சியில் முக்கிய இடம் வகித்தது என்ற உண்மையும் வெளிப்படை. எனவே வள்ளுவர் அரசியலில் முடியாட்சியைக் கூறுகின்றார் எனக் கூறினாலும், ஆய்ந்து நோக்கின் அவர் முடியாட்சி குடியாட்சியுள் அடங்கும் என்பதையும் அக் குடியாட்சியே சிறந்தது என்பதையும் விளக்குகிறார் எனத்தெளிதல் வேண்டும். விரிப்பிற் பெருகும். வள்ளுவர் காட்டும் குடியாட்சி வளர்வதாக!

–1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/163&oldid=1127964" இலிருந்து மீள்விக்கப்பட்டது