பக்கம்:ஓங்குக உலகம்.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீதையின் இறுதிப் பிரிவு

175


மூலம் நாம் காண்கின்றோம். ‘மணம் விண்ணுலகில் நிச்சயிக்கப்படுகின்றது’ என்று மேலை நாட்டார் கூறுகின்றார்கள். நம் நாட்டில் மணம் தெய்வநலம் சான்றது எனப் பேசப்படுகிறது. இவ்வளவுக்கும் இடையிலே உலக வாழ்வில் சில வேளைகளில் சில நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். முன்னரே மணமாகிக் கணவனோடு வாழ்ந்த மகளிர், ஏன்?-இரண்டொரு மக்களைப் பெற்ற மகளிர்-பிறகு வேறொருவரைக் காதலித்து அல்லது காமமுற்று அவருடன் பிரிந்து செல்வதைக் காண்கிறோம். இது வெறுக்கத்தக்கதேயாகும். ஆயினும் அந்தப் பிந்திய காதல் வாழ்வு கைகூடாவிடின் இருவரும் ஒருசேர இறக்கும் செய்திகளும் நம் காலத்தில் நடக்கின்றன. இதை என்னவென்று சொல்லுவது? இதுவும் தவறுதான். ஆனால் அந்தத் தவறு செய்த உயிர்கள் தம்மைத் தியாகம் செய்ததால் தெய்வநிலை பெற்று விட்டனவா? நாம் மேலே கண்ட வழிவழியாக அவர்கள் இருவரிடம் பொருந்திய தெய்வநெறிக் காதல், இடையில் பரமதத்தன் போன்ற ஒருவனால் தடைசெய்யப்பெற்று, இறுதியில் முடிவுற்றதா! திருவிளையாடற் புராணத்துக் கெளரியும் பெரிய புராணத்துப் புனிதவதியும் வடநாட்டு மீராவும் தெய்வநிலையில் ஒன்றிய வகைப்படி இவர்களையும் இணைக்கலாமா? வாழ்வையே துச்சமென எண்ணி-பின் உலகில் உண்டாகும் பழிப்பினையும் கருதாது-ஏன்? அவளுக்கு முன்னரே உள்ள மக்கள் கணவர் இவர்களை மறந்து-இறைவனோடு பிணைந்து மரணமுற்ற நிலையினைப் போற்றுவதா? அன்றித் தூற்றுவதா?

நாளிதழ்களில் இவைபோன்ற செய்திகள் வரும்போது என் உள்ளம் இவ்வாறு எண்ணுவது உண்டு, இவர்கள் செயல் தவறு எனக் கண்டால், ‘கொண்டானிற்றுன்னிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/178&oldid=1128018" இலிருந்து மீள்விக்கப்பட்டது