பக்கம்:ஓங்குக உலகம்.pdf/183

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

180

ஓங்குக உலகம்


எனவேதான் கம்பர் அந்த இராவணனுக்கு மட்டுமன்றி-இன்றும்-இனி வருங்காலத்தும் வாழும்-வாழப்போகும் இராவணருக்கு-தருக்கு மிக்க அரசர்களுக்கு-அமைச்சர்களுக்குத் தாம் நாட்டுக்கு அல்ல; நாடு தனக்காக என எண்ணும் அரக்கர்களுக்குப் பாடம் கற்பிக்க இரணியனை வரவழைத்தார்-ஆயினும் அந்த இராவணன் கேட்கவில்லை. முடிவு அறிந்ததே! ஆனால் உலகில் வாழும் இன்றைய இராவணர்?

கம்பர், இரணியப் படலத்தினை வீடணன் வாயிலாக இராவணனுக்குச் சொல்லும் முகத்தான் அமைக்கின்றார். ‘இதற்கும் முன் நிகழ்ந்தது’ எனக் காட்டி அவனைத் திருத்தி, சீதையை விடுவித்து இராமனைப் பணிய வேண்டும் என்று வேண்டுகிறான் தம்பி வீடணன். நமக்கு இங்கே அவன் கதை வேண்டுவதில்லை. அவன் காட்டிய இரண்டொரு கருத்தினைக் கண்டு அமைவோம்.

தான் ஆண்ட அத்தனை உலகங்களும் தன் பெயர் அன்றி வேறு பெயரைக் கூறவும்கூடாது என்பது இரணியன் கட்டளை. தனக்கு மேல் இறைவன்-தன்னைச் செலுத்துபவன் உளன் என்பதை மறந்தான். ‘யான், எனது’ என்னும் செருக்கினால் கண் மூடினான். அவனைத் திருத்த வேறு யாரும் வரவில்லை? அவன் மகனே வந்து திருத்த முற்பட்டான். அவன் மகன் பிரகலாதன் இறைவன் எளிமையினையும் இறைவனின் முடிவிலா ஆற்றலுடைமையையும் தெளியக் காட்டினான். இரண்டு இடங்களைக் கண்டு அமைவோம்.

தன் குருவின் விருப்பினுக்கு மாறாகப் பிரகலாதன் இறைவன் பெயரைச் சொல்கிறான். ஆசிரியர் ‘கெடுத்தே... மிந்தனை உன்னையும் என்னையும்’ என,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/183&oldid=1135735" இலிருந்து மீள்விக்கப்பட்டது