பக்கம்:ஓங்குக உலகம்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டுவது அஞ்சாமை

23


எதிரிகளுக்கு அஞ்சித் திரும்பியே தன்னாட்டுக்கு வாராதிருந்தால் உலகில் இன்று அந்தச் சமயம் அன்புச் சமயமாக வாழுமா? அஞ்சாமையில் தானே அன்பு பிறந்தது. இப்படியே ஒவ்வொரு சமயத்தையும் அதனதன் சமயத் தலைவர்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அதனால் நான் யாவற்றையும் அஞ்சாத பொருள் என்று கூறவில்லை. அஞ்சவேண்டுவனவற்றுக்கு அஞ்சவேண்டுவதே. திருவள்ளுவரும் இதைத்தான்.

‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்’

என்றார். எனவே அஞ்சக் கடவதாகிய பழி பாவங்களுக்கும் பிற கொடுமைகளுக்கும் அஞ்சவேண்டுவதே கடமையாகும். ஆனால் மனிதன் அவற்றிற்கெல்லாம் அஞ்சாது, அளவுக்கு மீறிய பழிதரும் செயல்களையும் பாவச் செயல்களையும் கூசாது செய்கின்றான்; அவற்றால் தான் வென்றுவிட்டதாகவும் மார்தட்டி எக்காளமிடுகின்றான். ஆனால் அதே வேளையில் அஞ்ச வேண்டாததற்கெல்லாம் அஞ்சி எதை எதையோ கோட்டைவிட்டுக் கொண்டே போகின்றான். முதலாவதாக, இந்த அச்சத்தின் காரணமாக மனிதப் பண்பாடே நிலை கெடுகின்றது. தம் தலைவர் முன்னே ‘நல்லதை நல்லது’ என்று சொல்ல அஞ்சி, அவர் ‘கெட்டது’ என்றால், ‘ஆம்; கெட்டது’ என்று கூத்தாடும் காட்சி நாட்டில் பலப்பல. ஆகவே உயர்ந்த ஒழுக்க நெறியே மறக்கப்பட்டு மறைக்கப்படுகின்றது. நாடாளும் அரசராயினும் தவறு செய்தால் சுட்டிக் காட்டவேண்டிய் அஞ்சாமையை விடுத்து, தமது பதவியும் பிறநலன்களுமே கெடும் என்ற காரணத்தால் பிறரையும் பொது நலத்தையும் காட்டிக் கொடுக்கும் அச்சத்தை இன்று உலகில் எங்கும் காணமுடிகின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/26&oldid=1127546" இலிருந்து மீள்விக்கப்பட்டது