பக்கம்:ஓங்குக உலகம்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விழாக்கள்

27


போன்றவை இந்துக்களால் கொண்டாடப் பெறுகின்றன. மேலைநாடுகளில் தொன்மையான எகிப்திய கிரேக்க உரோம யூதர் நாடுகளில் நம் தமிழ்நாட்டினைப் போன்றே மிகப் பழங்காலந்தொட்டு சமய அடிப்படையிலும் சமுதாய அடிப்படையிலும் விழாக்கள் நடை பெற்றுள்ளன. (En. Britanica Vol. 9. p.p. 127&128) இங்கிலாந்து, ஜர்மனி, அமெரிக்கா, போன்ற நாடுகளில் அவர்தம் நாட்டின் நிலைத்த திருந்திய வாழ்க்கை அமைந்த பிறகு சமய அடிப்படையில் விழாக்கள் சிறந்ததெனக் காட்டுவர். (En. Britanica Vol. 9. p.p. 200 & 201) எனினும் அந்த நாடுகளிலும் பழங்காலந்தொட்டே பழங்குடிமக்கள் அவரவர் தம் மரபுநிலை பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப விழாவினைக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது தேற்றம்.

சமய விழாக்கள் அடிப்படையில் கிறித்தவர்தம் கிறித்து பிறந்த நாள் விழா, நல்ல வெள்ளி போன்றனவும் மகமதியர்தம் ரம்சான், பக்ரீத் போன்றனவும் சீனாவில் கொண்டாடப்பெறும் புத்தர் விழாவும் நம் நாட்டு புத்த பெளர்ணமியும், சைனர்தம் தீர்த்தங்கரர் பற்றிய விழாக்களும் பிற சமயத்தலைவர் விழாக்களும் நினைவு கூர்தற்குரியன.

சமுதாய அடிப்படையில் நம்நாட்டில் காலந்தோறும் நடைபெறும் விழாக்கள் பல. அறுவடைப் பயன் கண்டு மகிழும் பொங்கல் விழாவும், வசந்த விழா, ஹோலிப் பண்டிகை போன்றனவும் அவற்றுள் அடங்கும். நாட்டு விழாக்களில் அமெரிக்க விடுதலைநாள் விழா, இந்திய விடுதலை விழா, குடியரசு விழா போன்றவை அடங்கும். இவற்றுடன் நல்லவர் பிறந்து, மறைந்த நாட்களையும் நாம் விழாவாகக் கொண்டாடுகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/30&oldid=1127283" இலிருந்து மீள்விக்கப்பட்டது