பக்கம்:ஓங்குக உலகம்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ஓங்குக உலகம்


அன்றாடக் காட்சியன்றோ! குங்குமம்-மஞ்சளால் ஆகிய குங்குமம்-சிவப்பு நிறமாக இருக்கும். அதைச் செம்மையாகத் தயாரித்தால் அதன் மணமும் மருந்துத் தன்மையும் கெடாமல் இருக்கும்.

இந்த மஞ்சள் குங்குமம் பெண்கள் அணிவதால் மற்றொரு சிறப்பும் உண்டு. மயக்கும் சக்தியால் (Mesmerism) பெண்களை மயக்கிக்கொண்டு செல்லும் கயவர் திறன் இக்குங்குமம் இட்ட பெண்களிடம் பலிக்காது. அவர்தம் மயக்கும் சக்தியை வெல்லும் ஆற்றல் இந்த மஞ்சள் குங்குமத்துக்கு உண்டு. அதனாலேயே மகளிர் எங்கே வெளியில் சென்றாலும் இக் குங்குமத்தை இட்டுக்கொண்டே செல்வர்.

மற்றும் இந்த மஞ்சளைப் பழுக்கப் பூசி, குங்குமத்தை அகல அணிந்து வெளியே செல்லும்போது, காணும் ஆடவர் இவர்களைத் தெய்வமாகவே போற்றுவர். ‘கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சுபுகாரே’ என்ற தமிழ் வாக்கியத்துக்கு இவர்கள் சான்றாக நின்று, கண்டவர் தம்மைக் கடவுளராகக் கருதி ஒதுங்கும் நிலைபெறுவர். ஆனால் இன்று பல பெண்கள் இந்த வழுவா அறத்தை மறந்து, உடல் புறம் தெரியும் ஆடை அணிந்து, மாவாகிய ‘பவுடரைப்’ பூசி, எதையோ பொட்டாக இட்டுத் தெருவில் செல்ல கண்டவர் கண்வலைப்பட்டு, கையகப்பட்டு, கசங்கி அழிய விரும்புவதைக் காண்கின்றோம். இந்த அவல நிலையை மஞ்சளே மாற்றவல்லது.

இவ்வாறு உடல்நலத்தையும் கற்பின் அறத்தையும் ஒருங்கே காக்கும் மஞ்சளுக்கு உள்ள மருந்தின் ஆற்றலையும் எண்ணிப்பார்க்க வேண்டும். மகளிர் உடலில் பூசுவதால் உண்டாகும் ஒருசில பயன்பற்றி அறிந்தோம். மேலும் அவ்வாறு பூசிக் குளிப்பதால் உடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/39&oldid=1127305" இலிருந்து மீள்விக்கப்பட்டது