பக்கம்:ஓங்குக உலகம்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

ஓங்குக உலகம்


உள்ளமும் அதன்வழி அரும்பும் உணர்வுமே உலகநெறியை ஒருவழிப்படுத்துகின்றன என அறியலாம்.

உலகில் எத்தனையோ கோடி மக்கள் வாழ்கின்றார்களே. அவர்தம் உள்ளம் அத்தனையும் எப்படி உலகை ஒருவழிப்படுத்த இயலும் என்ற ஐயம் எழலாம். ஆயினும் மக்கள் அனைவரும் அந்த உள்ள உணர்வைச் செயல்படுத்த நினையா நிலையும் நினைப்பினும் செயலாற்ற முடியாச் சூழலும் எங்கோ ஒருசில மக்களின் உணர்வுவழி உலகம் செல்லக் காரணமாகின்றன. அந்த ஒருசில உள்ளங்கள் நல்ல உள்ளங்களாக அமைந்துவிடின் நாடும் உலகமும் நன்மை பெற்றுச் சிறக்கும்! அல்லாவிடின் என்னாகும்? எடுத்தியம்ப வேண்டா!

இந்த உலகினை நல்வழியினில் ஆற்றுப்படுத்தும் நல்ல உள்ளங்களை அன்றுதொட்டுத் தமிழறிஞர் எண்ணிப் பார்த்துப் பார்த்து ஏட்டிலும் வடித்துச் சென்றுள்ளனர். உள்ளம் தூய்மையாக இருந்து அதன் வழியே செயலாற்றுவதே எல்லா அறங்களுக்கும் மேம்பட்டதாகும் என்ற உண்மையை வள்ளுவர்,

‘மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்’

என்று வரையறுத்துள்ளார். அப்படியே நல்ல செயல்கள் ஆற்றுவதற்கான அடிப்படையாய உள்ளம் மக்களுக்கு அமையவேண்டும் என்ற உண்மையினையும் அவ்வுள்ளம் நிலை கெட்டு அல்லாதனவற்றை நினைக்கும் அவல நிலையினையும் வள்ளுவர் பலவிடங்களில் சுட்டிக் காட்டத் தவறவில்லை. ‘உள்ளுவ் தெல்லாம் உயர்வுள்ளல்’, ‘உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறர் பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல்’ என்பன அவர் வாக்குகளன்றோ,

இந்த நல்ல உள்ளத்தை நாட்டில் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது? இந்த வினாவுக்கு விடையாக அன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/43&oldid=1127314" இலிருந்து மீள்விக்கப்பட்டது