பக்கம்:ஓங்குக உலகம்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ஓங்குக உலகம்


காத்திராவிட்டால் இன்று இந்த நூற்றாண்டு விழாவினை நாம் கொண்டாட மாட்டோம். ‘சின்னவர்’ அல்லது ‘சின்ன ஐயா’வைப் பெரியவரும் அவர்தம் துணைவியாரும் ஒருவித கவலையும் சேராவகையில் போற்றிக் காத்தனர். வந்தவர்களோடெல்லாம் வேப்பமரத்தடியில் திரு.வி.க. பேசிக்கொண்டும், வழி காட்டிக் கொண்டும், அறிவுரை கூறிக் கொண்டும் இருக்க, பெரியவர் பின் அறையில் இருந்து கொண்டு நவசக்தி, அவர்தம் நூல்கள் முதலியவற்றின் ‘புரூப்’களைத் திருத்திக் கொண்டிருப்பார். அண்ணியார் முதல் மாடி மேலே இருந்து அந்தச் சிறிதான (2அடி அளவே இருக்கும்) படியில் அடிக்கடி வந்து அவர்களைக் கண்டு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வர். தேவையானபோது கீழே இருந்த சாது அச்சுக்கூட ‘போர்மேன்’ நாராயண சாமியைக் கூப்பிட்டு அண்ணியார் அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து உதவுவார்கள். இப்படி ‘சின்னவர்’ பாதுகாக்கப்பட்டதாலேயே அவர் எந்தக் கவலையுமின்றி எல்லாருக்கும் உபதேசம் செய்யும் பெரியவரானார்; இராயப்பேட்டை முனிவர் ஆனார். ஒரு நிகழ்ச்சியினைச் சுட்டிக் காட்டலாம் என எண்ணுகிறேன். மாலை நான்கு மணி அளவில் அண்ணியார் சிறிய படியில் பாதி இறங்கி வந்து ‘நாராயணசாமி, சின்னய்யா இன்று வெளியே போக வேண்டுமல்லவா?’ என்பார்கள். நாராயணசாமியும் ‘ஆமாம் அம்மா! பெரிய ஐயா ஏற்பாடு செய்துவிட்டார்கள்’ என்பார். அண்ணியரர் திரும்பிமேலே சென்று விடுவார்கள். என்ன ஏற்பாடு? யாருக்கும் புரியாது தான்.

திரு.வி.க. அவர்கள் அடிக்கடி கூட்டங்களில் தலைமை வகிக்கவோ பேசவோ மாலை வேளைகளில் வெளியே செல்வார். அழைக்க மற்றவர்கள் வந்தாலும் வேண்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/51&oldid=1127560" இலிருந்து மீள்விக்கப்பட்டது