பக்கம்:ஓங்குக உலகம்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு

55




9. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு


திரு.வி.க. நல்ல தமிழ்ப் பரம்பரையின் வழி வந்தவர். அவர் பாட்டனார் காலத்தில்-இராம வேங்கடாசல முதலியார்-திருவாரூரில் வழிவழியாக வாழ்ந்த அவர் மரபு (சோழிய வேளாளர்) சென்னைக்குக் குடியேறிற்று. (இராயப்பேட்டை-புதுப்பேட்டைப் பகுதி). திரு.வி.க. கடைசிவரையில் அந்தப் பகுதியிலேயே இருந்தார்.

தந்தையார்-விருத்தாசல முதலியார்-தாய்-சின்னம்மா-பெரியப்பா-நமசிவாய முதலியார். சென்னையில் அரிசி வாணிபம் செய்த விருத்தாசல முதலியார் செம்பரம்பாக்கம் ஏரி ஒப்பந்த வேலைக்காக வெளியே சென்றார். பின் துள்ளல் என்னும் கிராமத்தில் தங்கிவிட்டார். திரு.வி.க.வும் அவர் அண்ணார் உலகநாத முதலியாரும் அங்கே பிறந்தவர்கள். ‘திரு’ திருவாரூரைக் குறிக்கும். ‘வி’ தகப்பனார் பெயரைக் குறிக்கும்.

12-9-1881ல் உலகநாத முதலியாரும் 26-8-1883ல் திரு.வி.க.வும் பிறந்தனர். முதலில் இவர்கள் பெரியசாமி, சின்னசாமி எனவே அழைக்கப்பெற்றனர். திரு.வி.க. பெற்றோருக்கு ஆறாவது பிள்ளை. வீடு துள்ளல்-ஓலை வேய்ந்த சிறுவீடு. அங்கேயே வளர்ந்தார். அப்போதே இயற்கையோடு பழகினார். தந்தையே முதல் ஆசிரியர்-தாழ்வாரமே பள்ளிக்கூடம் (தந்தையாரின் கடையின் தாழ்வாரம்) தெருப்பள்ளிக்கூட மரபில் அரிச்சுவடி, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதலியன இருவராலும் ஒப்புவிக்கப் பெறும். பிறகு சென்னை இராயப்பேட்டை (புதுப்பேட்டையில்) 1890ல் குடியேறினர். முதலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/58&oldid=1135790" இலிருந்து மீள்விக்கப்பட்டது