பக்கம்:ஓங்குக உலகம்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

ஓங்குக உலகம்


தெருக்கோடியில் இருந்த ‘ஆரியன் பிரைமரி’ பள்ளியில் படித்தார். ஒவ்வொரு வகுப்பிலும் முதன் மாணவராகப் பரிசு பெற்றார். 1898ல் வெஸ்லி கலாசாலையில் சேர்ந்தார். 5வது பாரத்தில் யாழ்ப்ப்ாணம் நா. கதிரைவேற் பிள்ளை அவர்களிடம் தமிழ் பயின்றார். அவருடன் கலந்து, அவருக்காக வழக்குமன்றம் சென்றும் அவரோடு பிறவகையிலும் காலம் கழித்தமையால் பள்ளி இறுதித் தேர்வு எழுத முடியவில்லை. தந்தையார் மறைந்தார். பள்ளிப் படிப்பு முடிந்தது. ‘கமர்ஷியல் பள்ளியில் “புக்கீப்பிங்” பயின்றார்.

‘இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை’ அப்போது உண்டாக்கப்பட்டது. கதிரைவேற் பிள்ளையின் பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுத் தாமும் தமிழ்ப் புலமை பெற்றார். பல தமிழ் அறிஞரோடு கலந்து உறவாடினார். தமிழுடன் சித்தாந்த சாத்திரமும் பயின்றார். 1912ல் உள்ள அவரது புகைப்படம் அவரை ஒரு பெரும் சமயாசாரியராகக் காட்டும். வடமொழியும் ஓரளவு கற்றார். “ஷேக்ஸ்பியர் கிளப்புடன்” தொடர்பு கொண்டு ஆங்கிலமும் நன்கு தெரியப் பெற்றார். ஓவியமும், இசையும் ஓரளவு அறிந்தார். அப்போதே பெரியபுராணத்துக்குக் குறிப்புரை கண்டார். இயற்கையோடு இயற்கை முறையில் பழகத் தொடங்கினார். 1906ல் முதல் முதல் கதிரைவேற் பிள்ளையின் சரித்திரம் எழுதினார்-பின் பல நூல்கள் உரையிலும் பாட்டிலும், 1917ல் பத்திரிகை உலகில் புகுந்தார்.

பின்னி கம்பெனி முதலிய இடங்களில் சிலசில காலம் வேலை பார்த்தார். 1908ல் அவை முடிவுற்றன. ‘உமாபதி குருப்பிரகாசம் பிரஸ்’ என்ற அச்சுக்கூடம் அவர் தமையனார் அமைத்தார். அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/59&oldid=1127368" இலிருந்து மீள்விக்கப்பட்டது