பக்கம்:ஓங்குக உலகம்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு

57


வர்தம் பெரியபுராணக் குறிப்பு சஞ்சிகையாக வெளி வந்தது. பின் 1910ல் ஆயிரம்விளக்கு வெஸ்லி பள்ளியின் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக அமர்ந்தார். மாணவருக்குத் தமிழ்ப் பயிற்றும் பணி கொண்டார். கணக்கும் கற்பித்தார். பின் 1916ல் வெஸ்லி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரானார். அப்போதே அரசியல் நாட்டம் பெற்றார். 1917 இறுதியில் கல்லூரியை விடுத்து ‘தேசபக்தன்’ ஆசிரியரானார். பின் ‘நவசக்தி’ எழுந்தது.

1906-07லேயே திரு.வி.க. அரசியல் தொடர்பு கொண்டார். ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. அது சமயத்தைப் பழித்த காரணத்தால் அதற்கு எதிராகத் திரு.வி.க. பேசினார்-எழுதினார். பெசன்ட் அம்மையார், சர். பி. தியாகராய செட்டியார், நாயர் முதலியோருடன் தொடர்பு கொண்டார். 1917ல் முதல் முதல் வெளிப்படையாக மாநாட்டில் மேடை ஏறிப் பேசினார். பிறகு பல மாநாடுகளில் தலைமை தாங்கியும் சொற்பொழிவாற்றியும் வந்தார். அவர் பேச்சுத் திறமை பலரைக் கவர்ந்தது. தமிழின் எளியநடை அனைவருக்கும் புரிந்தது. பத்திரிகை வழி ‘நல்ல தமிழ்’ வளர அழகிய தேவையான கட்டுரைகள் எழுதினார். தேச பக்தனும், நவசக்தியும் இன்றைய பல எழுத்தாளர்களுக்கு வழி காட்டிகளாம். அக்கால அரசியல் பற்றிய பல கட்டுரைகள் அவற்றில் வந்தன. அவரும் பலவற்றில் பங்கு கொண்டார். அக்கால அரசாங்கத்தைத் தீவிரமாக எதிர்த்தார்; அதனால் பல தொல்லைக்கு உள்ளானார். தேச பக்தனை விடுத்து 22-10-20ல் நவசக்தி தொடங்கினார்; காங்கிரஸ் சார்புடையது; அதனாலும் அரசாங்கத் தொல்லைக்கு ஆளாகியது. அதில் வளர்ச்சியும் சரிவும் இடையிடை காணப்பட்டன. காங்கிரஸ் பற்றியும் பிற நாட்டு நிகழ்ச்சிகள் பற்றியும்

ஓ.—4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/60&oldid=1127769" இலிருந்து மீள்விக்கப்பட்டது