பக்கம்:ஓங்குக உலகம்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

ஓங்குக உலகம்


எளிய தமிழில் படிப்பவர் உள்ளத்தில் பதியும்படி எழுதுவார். அத்துடன் கூட்டங்களில் கலந்துகொள்வார் சமய மாநாடுகளிலும் தலைமை வகித்தும் பேசியும் தொண்டு செய்வார். காஞ்சியில் 31வது தமிழர் மாநாடு திரு.வி.க. தலைமையில் 1925-26ல் நடைபெற்றது. அது தமிழக அரசியலில் மாற்றம் கண்டது. பெரியார் காங்கிரசை விட்டுப் பிரிந்தார் (வகுப்புவாத அடிப்படை அமைப்பில்). குடியரசுக்கும் நவசக்திக்கும் மாறுபாடு இருந்தது-எழுத்தில்.

திரு.வி.க. ‘சாது’ என அழைக்கப் பெற்றார். எனவே அவர் அச்சகமும் ‘சாது அச்சுக் கூட’மாயிற்று. சன்மார்க்க அரசியல் வேண்டும் என்று வலியுறுத்தி எழுதிவந்தார்.

தொழிலாளருடன் தொடர்பு பெரியது. 1908லிருந்ேேத திரு.வி.க.வுக்கும் இதில் தொடர்பு உண்டு. வாடியா, செல்வபதி செட்டியார் போன்றோர் தொடர்பு அதிகம். வாடியாவின் ஆங்கிலப் பேச்சுக்களைத் தமிழில் மொழி பெயர்ப்பார். செல்லுமிடமெங்கும் தொழிற் சங்கம் அமைக்க முயன்று, வெற்றியும் கண்டார். பல எதிர்ப்புக்கள், கதவடைப்புகளைச் சமாளித்தார். 1920ல் சென்னையில் நடந்த முதல் மாநாட்டின் வரவேற்புத் தலைவராக இருந்தார். பல மாறுபாட்டுச் சங்கங்களும் எதிர்ப்புகளும் கொடுமைகளும் ஏற்று முறியடிக்கப் பெற்றன. (பக்கிங்ஹாம் மில், கர்னாடிக் மில் முதலியன) பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியுள்ளார். அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினார். மிக அதிகமாக உழைத்த காரணத்தாலேயே திண்ணிய அவர் உடல்நலம் குறையலாயிற்று. தொடர்ந்து தமிழில் எழுதுவதையும் நவசக்திப் பணியையும் தொழிலாளர் பணிகளுக்கிடையே நடத்திவந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/61&oldid=1127374" இலிருந்து மீள்விக்கப்பட்டது