பக்கம்:ஓங்குக உலகம்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு

59



இவர் வாழ்க்கைத் துணைவியாகச் சில காலம் வாழ்ந்தவர் ‘கமலாம்பிகை’ அம்மையார். 13.9.1912 திருமணத்தில் சைவர், கிறித்தவர் அனைவரும் அவரவர் சமய முறைப்படி வாழ்த்தினர். 18.9.1918ல் ம்னைவி மறைந்தார்.

திரு.வி.க. ஆழ்ந்த சமயப் பற்றுடையவர்-சைவர். சைவசித்தாந்த மகாசமாசத் தலைவராக இருந்தார். சைவர் மாநாடுகள் பலவற்றுள்-இந்தியா இலங்கை-தலைமையேற்றும் சொற்பொழிவாற்றியும் சிறந்தார். எனினும் பிற சமயக் காழ்ப்பு இல்லை. சோமசுந்தர நாயகர், கதிரைவேற் பிள்ளை போன்றோர் தொடர்பால் சைவப் பற்றும் தமிழ்ப் பற்றும் வளர்ந்தன. இளமையில் ஆங்கிலத்தில் இவருக்கு மோகம் இருந்தபோதிலும் பின் தமிழ்ப் பித்தரானார். ‘இராயப்பேட்டை இளைஞர் கல்விக் கழகம்’ என்ற ஆங்கிலம் வளர்த்த சபை 1903-ல் ‘பாலசுப்பிரமணிய பக்த ஜன சபையாக’ மாறிற்று. வடிவேல் செட்டியார் போன்றோருடன் பழகி வேதாந்த நூல்களையும் கற்றார். பல விழாக்களில் பங்கு கொண்டார். திருவல்லிக்கேணி சிவனடியார் திருக்கூட்டத்தின் முதல் தலைவராக இருந்தார். அப்படியே பல சைவ, தமிழ்ச் சபைகளின் தலைவராக இருந்தார். சமாசத்தில் ஒரு பாதிரியைப்போல உழைத்தார். தீட்சைகளில் பற்று இல்லை. தீட்சை பெற்றும் பின் அனுஷ்ட்டானங்களைக் கைவிட்டார். கோவில்களுக்குச் சென்று வழிபடுவார், அப்படியே வைணவ சமயத்திலும் ஈடுபாடு கொண்டு பல சபைகளில் பங்கு கொண்டார். மேலும் ஜைனம், பெளத்தம், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களுடன் தொடர்பு கொண்டார். இவை எல்லாவற்றிலும் இயக்கும் இறைவன் ஒருவனே எனும் சமரச உணர்வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/62&oldid=1127376" இலிருந்து மீள்விக்கப்பட்டது