பக்கம்:ஓங்குக உலகம்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ஓங்குக உலகம்


நிலைப் பள்ளியின் தமிழாசிரியனாகியநான் போட்டியிடுவதா? வெற்றி பெறுவதா? எனச் சிலர் ஏளனம் செய்தனர். ஆனால் அண்ணா அவர்கள் ‘தமிழாசிரியர் அரசியலுக்கு வருவது தமிழகத்திலேயே முதல் தடவை; எனவே துணிந்து நில்லுங்கள்’ என ஊக்கினார்கள். அத்துடன் அவர்களே என்னுடன் மாட்டு வண்டியில் சில ஊர்களுக்கு இரண்டொரு நாள் வந்து எனக்காக வாக்குகளைக் கேட்டு உதவினார்கள். (அப்போது அவர்கள் ஈரோட்டில் குடியரசு இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என நினைக்கிறேன்) இந்த மறவா நிகழ்ச்சியினை என் ‘காஞ்சி வாழ்க்கை’ என்ற நூலில் (பக்கம் 93) குறிப்பிட்டுள்ளேன்.

பின் காஞ்சியில் நான் ‘தமிழ்க்கலை’ தொடங்கி நடத்திய காலத்தில் ‘தமிழ்க்கலை’ இல்லத்துக்கு அண்ணா வந்து வாழ்த்து வழங்கினார்கள். அவர்கள் ஈரோட்டிலிருந்து 16.10.40ல் கலைஞர் தி.க.சண்முகம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் காஞ்சீபுரம் ‘தமிழ்க்கலை நம்மைச் சார்ந்த பத்திரிகை’ என்று குறிப்பிட்டுள்ளதை இன்றும் எண்ணி எண்ணிப் பெருமைப்படுகிறேன்.

காஞ்சியில் அவர்கள் திராவிடநாடு தொடங்கி, ஈழத்து அடிகளார் மேற்பார்வையில் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தகாலை, அடிக்கடி சென்று அவர்களோடு அளவளாவிய பேச்சுக்களும் பிறவும் கண்முன் நிழலாடுகின்றன.

பின் 1944ல் சென்னைக்கு வந்து பச்சையப்பனில் நான் பணி ஏற்ற பிறகு, அண்ணா அவர்கள் தாம் பயின்ற கல்லூரியில் பணி ஏற்றமை குறித்துப் பாராட்டினார்கள். பின் அவர்கள் முதலமைச்சராகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/71&oldid=1127771" இலிருந்து மீள்விக்கப்பட்டது