பக்கம்:ஓங்குக உலகம்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா

73


மாற்றச் சொல்லி, இந்த விழாவினைக் குறித்துக் கொள்ளச் சொன்னார்கள். அப்படியே குறித்த வேளையில் (திருவல்லிக்கேணி நேஷனல் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது) வந்து சிறப்பாகத் தலைமையேற்றுப் பேசி அனைவரையும் மகிழ்வித்தனர். கூட்டத்தில் வரவேற்ற நான் இன்றேபோல் ‘நும்புணர்ச்சி’ என்ற சங்கச் சான்றோர் அடியினால் வாழ்த்தினேன்.

காஞ்சியில் கல்லூரி இல்லையே என்ற குறை அண்ணா அவர்களுக்கு உண்டு. அதில் நானும் பங்கு கொண்டேன். பல அன்பர்கள் உதவினர்; கல்லூரி உருவாயிற்று. கல்லூரித் தொடக்க விழாவில் சர். ஆர்க்காடு இராமசாமி முதலியார் அவர்கள் தலைமை வகித்துத் தொடங்கிவைத்தார். அவர் பேச்சு ஆங்கிலத்தில் அழகுற அமைந்தது. ஆயினும் அதைப் பழகு பைந்தமிழில் அண்ணா அவர்கள் மொழி பெயர்த்துத் தந்தமையே அதற்கு ஏற்றம் அளித்தது. அப்படியே அதற்கெனக் கட்டி முடிக்கப்பெற்ற கட்டடத் திறப்பு விழாவிற்குச் சர். ஆர்க்காடு இலட்சுமணசாமி முதலியார் தலைமை வகித்து அதைத் திறந்து வைத்தார்கள் அவரும் ஆங்கிலத்தில் அழகுறப் பேசினார்கள். ஆயினும் அதை மொழிபெயர்க்க அண்ணா அன்று அங்கு இல்லை. அங்குள்ள அனைவரும் அண்ணா இல்லை; அவர்கள் வாரிசாக நீங்கள்தாம் மொழிபெயர்க்க வேண்டுமென என்னிடம் கூறினர். நானும் மொழிபெயர்த்தேன். காஞ்சிவாழ் மக்கள் என்னை அண்ணாவுடன் இணைத்துப் பாராட்டிய பெருமையினை இன்றும் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

ஓ.—5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/76&oldid=1127773" இலிருந்து மீள்விக்கப்பட்டது