பக்கம்:ஓங்குக உலகம்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ஓங்குக உலகம்



ஒருமுறை அவர் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு துறையில் உள்ள குறைபாடுகளை அவரிடம் சுட்டிக் காட்டி, அவர்களை அத்துறையின் அமைச்சரிடம் சொல்லித் திருத்துமாறு கூறினேன். அவர் உடனே ‘உங்கள்......’ தானே அத்துறை அமைச்சர்; ‘நீங்களே சொல்லுங்கள்’ என்றார். நான் உடனே என்ன அண்ணா! ‘உங்கள்’ என்று இப்படிச் சொல்லுகிறீர்கள். உங்கள் தம்பி அல்லவா அவர் என்றேன். அவரும் ‘தம்பிதான், தம்பி அண்ணன் சொல்லைக் கேட்கவில்லையே; என்ன செய்வது’ என்று வேதனைப்பட்டார். அந்த வேதனைக் காட்சி என் உள்ளத்தை உலுக்கியது, உருக்கியது.

சென்னை உலகத்தமிழ் மாநாட்டின் அறிஞர் கூட்டத்தின் கடைசி நாளில் பல்கலைக்கழக மண்டபத்தில் அண்ணா அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆங்கிலத்தில் பேசிய பேச்சினை-சொல்லாட்சியும் பொருள் மாட்சியும்-கேட்டு, வந்திருந்த அனைவரும் பாராட்டிய அந்தப் பாராட்டு, ‘கல்வியே கரையிலாத காஞ்சி மாநகர்’ தந்த அந்த அறிவுச் செல்வத்தின் சிறப்பினை-பாரறியச்செய்த நலத்தினை எண்ணி எண்ணி வியந்தேன்-வியக்கிறேன்-உள்ள நாள் வரையில் இவை அனைத்தையும் எண்ணி மகிழ்வேன்.

அவரோடு மட்டுமன்றி அவரைப் புரிந்து வளர்த்த சிற்றன்னையாருடன் அவர்கள் வீட்டில் பல நாட்கள் பேசிய பேச்சுக்களும், அவ்வன்னையார் கூறிய ஆக்கநெறி-வாழ்க்கை நெறி பற்றிய அறிவுரைகளும் எழுத்தில் அடங்கா!

அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது எண்ணி மகிழ்ந்து ‘திருத்தொண்டர் அண்ணா’ என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/77&oldid=1127554" இலிருந்து மீள்விக்கப்பட்டது