பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அவள் எண்ணிக்கொண்டிருந்தது தன்னைப் பற்றி; தனக்கு வரப்போகும் இன்பம் பற்றி; அந்த இன்பத்தைத் தரவேண்டிய கட்டழகன் எப்படியிருப்பான் என்பது பற்றித்தான். அவள் பெண். எல்லாக் குமரிகளையும் போல -வயது வந்த வாலிபர்களையும் போலத்தான்-அவளும்!

ஆனால், பெரியவர்களுக்கு இளம் உள்ளங்களின் எண்ணங்களைப் பற்றி என்ன கவலை? உனக்குச் சம்மதமா? இவனைப் பிடித்திருக்கிறதா?...இந்தப் பெண்ணை உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று மணமகளிடமும் மணமகளிடத்தும் கேட்க வேண்டுமா என்ன! பரஸ்பரம் பார்வை பறிமாற வேண்டியது அவசியமா என்ன! கழுத்திலே தாலி ஏறினப்புறம் அவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்கப் போகிறாள். அவன் தன் பக்கத்திலே வேண்டுமானாலும் சதா அவளை அமர்த்தி அழகு பார்க்கலாம். மாட்டுக்குத் தண்ணி காட்டுகிறமாதிரி ‘இந்தாம்மா பார்த்துக்கோ - இதுதான் மாப்பிள்ளை!.........மாப்பிள்ளை ராசாவே இதோ உம்ம பெண்ணு' என்று ஒரு நாடகம் என்னத்துக்காக? மேலும், நாங்கள் கல்யாணம் செய்து கொண்ட போது பெரியவா எங்க இஷ்டத்தைக் கேட்டா செய்தாக? என்னவோ எல்லாம் சரியாகத்தான் போகும்,-இளம் பருவத்தினரை ‘அக்கினி சாட்சியாக, மந்திரமோதி முடிச்சுப்போட்டு’ இணைக்கிற குடும்பப் பெரியார்கள் நினைப்பது இப்படித் தான். அவர்கள் வழியில் வந்தவர்தானே சிவகாமியின் அப்பாவும்.

ஆகவே, வாழ்க்கை என்பது கனவின் இனிமை நிறைந்தது இல்லை என்பதை சிவகாமி உணர முடிந்தது. தனது வாழ்க்கையைவகுக்கும் உரிமைமக்களுக்கு இல்லை. பெற்றோர்கள் இஷ்டப்படி தான் பிள்ளை