பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

தந்தை - மனைவி யிழந்து, வயதேறிப் போனவர் - ‘காதல் செயப் பெண்தேடி’ அலைபவர் தான் தனது இன்பத்துக்காக பக்கத்து வீட்டில் உள்ள ‘தாலியறுத்தவளை’ பதப்படுத்துவதும், திண்ணையில் ஒண்டுகிறவளை திண்டிலே சாய்ப்பதும் மகளுக்குத் தெரியாமல் போகுமா ?

அவள் பெண். அவளுக்கும் இன்பப்பசி உண்டு. அவள் வாலிபத்தின் வளமையிலே மினுமினுத்த பாவை. வயது பதினெட்டு தானே ஆகிறது. அவளுக்கு ‘பசி’ அதிகம் உண்டாவது இயல்பு.

அவள் அழகி. பருவ மலர். கவர்ச்சி இருந்தது. சமூகத்தில் வண்டுகளுக்குக் குறைவா என்ன! அதனால் அந்த மலர் வண்டுகளை இழுத்து இன்பம் அனுபவிக்க சந்தர்ப்பங்கள் நிறையக் கிடைத்தன

தங்தைக்கு மகள் பெயர் அடிபடுவது பிடிக்கவில்லை. அவரைப் பற்றி கேவலமாகப் பேசப்படுவதும் தெரியும். ஆனால் என்ன செய்வது?

‘பெயர் கெட்டதோ கெட்டுப்போச்சு பாபத்தைச் செய்யாமலிருக்கும் போதே என் பெயர் மீது எல்லோரும் பழிசுமத்தி யாச்சு. செய்யாமல் வீண்பழி ஏற்பதும் ஒன்று தான்; பாபம் செய்து விட்டு பழி சுமப்பதும் ஒன்று தான். மேலும், பெயர் எனக்கு இனி வரப் போவதில்லையே! முன்னால் சுமை மனதை உறுத்தியது - வீணாகப் பழி பிறந்துள்ளதே என்று அந்த மனச் சுமையாவது இல்லாமல் தீருமல்லவா இனி!' என்று துணிந்துவிட்டார் ஓரிரவில்.

சந்தர்ப்பம் தான் சதி செய்தது அன்றும். நல்ல நிலவு. நிலவிலே அவள் படுத்திருந்தாள். அசந்து கிடந்தாள். அவளையே ரொம்ப நேரம் கவனித்துக் கொண்டிருந்தார் அவர்.