பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


உமைபாலனே அனுப்பிவிட்டு, கோபு கல்லாவில் அமர்ந்தான். மேஜை இழுப்பைத் திறந்து சில்லறைகளையும் ரூபாய்த் தாள்களையும் இனம் பகுத்து மேஜையின் மீது வைத்தான். அருகில் உட்கார்ந்திருந்த ‘கனபாடி’ பொடி மட்டையைப் பிரித்து மூக்கின் துவாரங்களிலே செலுத்திவிட்டு, குத்துக் கம்பியில் செருகப்பட்டிருந்த பில்களையும் சாப்பாட்டு டிக்கட்டுகளையும் எண்ணிக் கணக்கிட்டார்.

அப்போது, வாசல் பெட்டிக்கடையில் ஏதோ கசமுசவென்று பேச்சுக் கேட்டது. தம் கடையில் அலுவல் பார்க்கும் ஜெயராஜ் என்பவனும் பெரிய இடத்துப் பிள்ளை என்று அங்கு பேச்சு அடிபட்டது. “டே அம்பி! கேட்டியாடா சங்கதியை ! நம்ம ஹோட்டல் பேர் பேப்பரிலே வரப் போகுதுடா ! ” என்று குவி யுடன் பேசி, ஜெயராஜ் பற்றிக் காதில் விழுந்ததையும் கொட்டினார். மத்தியானம் நடந்த கூத்தின் போது, டிக்கட் விற் ற பணத்தை ஜெயராஜ் தம்மிடம் கொடுத்ததையும் அவர் நினைத்தார்.

ஆளுல்,கோபு ஏனோ உதடுகளைப் பிதுக்கினன். முதற் பந்தி முடிந்ததும், எச்சில் இலைகளை எடுக்க மறுத்த ஜெயராஜைப்பற்றி யாரோ சொன்ன விவரத்தை அப்பாவிடம் எடுத்துக் காட்டினான். “ ம் ... விதின்னு ஒண்னு இருக்கத்தாண்டா இருக்கு !...நம்ம வேலையைக் கவனிப்போம்டா !” என்றார், பெரியவர் சின்னக் குரலிலே!

டிக்கட்டுகளின் வரிசை எண்களேச் சரிபார்த்து வந்த பெரியவர் சடக்கென்று திகைப்புற்றார். இடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/41&oldid=1280252" இலிருந்து மீள்விக்கப்பட்டது