98
அறிஞர் அண்ணா
ஆ : தப்பித்தவறி எவனாவது வந்தா, இவ எறிஞ்சி விழுவா. இப்ப, உங்ககிட்ட சிரிச்சிப் பேசினா பாருங்கோ, இந்தமாதிரி இருக்கவே மாட்டா. அது என்னமோ உங்களைக் கண்டதும்....
வா : அதெல்லாம் நம்ம பேஸ்கட், பர்சனால்லடி.....
வே : (ஆறுமுகத்தைப் பார்த்து) போங்க! உங்களுக்கு எப்பவும் கேலிதான். (வாலிபனைப் பார்த்து) எனக்கு மனசு பிடிச்சாத்தான், முகங்கொடுத்துப் பேசற வழக்கம்ங்க. அவன் மகாராஜனாக்கூட இருக்கட்டுங்க, நமக்கு என்னங்க, பணமா பெரிசு! மனசு தானுங்களே.
வா : ஆமாம்! எனக்கு...நானு இப்படிப்பட்ட இடத்திலே வந்து பழக்கமில்லாதவன்....
[எழுந்திருக்கிறான். வேதம் அவனைத் தொட்டு உட்காரவைத்து]
வே : உட்காருங்க! (ஆறுமுகத்தைப் பார்த்து) இவரைப் பார்க்கறபோதே பெரிய மனுஷருன்னு தெரியுது இல்லை.
ஆ : அதுக்கென்ன சந்தேகம்! நான் போயி, சாயா சாப்பிட்டுவிட்டுவர்ரேன்.
வே : (வாலிபன்மீது உராய்ந்தபடி) அண்ணன் வெளியே போகணுமாம், போய்த் தொலைக்கட்டும். அது இங்கே இருந்தா, வளவளன்னு பேசிகிட்டே இருக்கும். போகட்டும் வெளியே. நாம்ப நிம்மதியாப் பேசலாம்.....
வா : (புரியாமல்) என் அவர் இருந்தா என்னா? வேணுமானா போயிட்டு வரட்டுமே! கடை இருக்குமா இந்த நேரத்திலே?
ஆ : (கொஞ்சம் உரத்த குரலிலேயே) என்னா வேதம்! சாயா குடிக்கப் போகணும், காது கேட்கலே? ஏது! சொக்கி விட்டாயோ?
வே : (உரத்த குரலிலேயே) அட கொஞ்சம் இரு அண்ணே, அவரு காசு எடுக்கறதுக்குள்ளே கூச்சப்போடறே
[வாலிபனை நோக்கிக் கொஞ்சுவதுபோல]
ஏதாச்சும் சில்லறை இருந்தாக் கொடுங்கோ. இந்தச் சனியனைத் தொலைச்சிவிடுவோம்.
வா : சில்லறை இல்லையே.
[வாலிபன் மடிமீது உட்கார்ந்துகொண்டு]
வே : ரூபாயா இருக்கா?
வா : இல்லையே.
வே : (ஜேபியைத் தடவிக்கொண்டு) நோட்டா இருக்கா?