பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓர் இரவு

103


போட்டுகிட்டா, தீர்ந்தது. கோட்டை எல்லாம் தூளாகும்.

[தொலைவிலே கலகக் கூச்சல் கேட்கிறது.]

கேட்குதா, அதுதான் சங்கீதம்.

[ஒருவன் குடிவெறியிலே ஆடிக்கொண்டு வருகிறான்.]

பார்த்திங்களா! இதுதான் எங்க உலகத்து டான்சு. பாருங்க வேடிக்கையை.

[வந்தவனை வழிமறித்து]

ர : யாருடா அவன்?

வந் : (முறைத்துவிட்டுக் கூச்சலிடுகிறான்) டே! யாருடா நீ நான் யாரு தெரியுமாடா.

[மடியிலிருந்து ஒரு பேனாக்கத்தியை எடுக்கிறான்.]

ர : (சேகரைப் பார்த்து) கத்தி மடக்கி இருப்பதுகூடத் தெரியலை பயலுக்கு, அவ்வளவு போதை.

[வந்தவனை ஓர் அறை கொடுக்கிறான். வந்தவன், கூச்சல் அழுகுரலாகிறது.]

ர : (சேகரைப் பார்த்து) இவ்வளவுதான் இந்த உலகத்து வீரம் ஆரம்பத்திலே, வீராவேசமாக இருக்கும். முதல் அடி நம்மதாயிட்டா, பய காலிலே விழுவான்.

வ : அண்ணேன்! நான் யாரோன்னு பார்த்தேன். உங்க தம்பி அண்ணே நானு. உங்க கையாலே அடிபட்டா எனக்குக் கௌரவந்தாண்ணேன். நாம்ம ரெண்டுபேரும் மாமன் மச்சான்மாதிரி பழகனவங்கதானேண்ணேன். நீங்க பெத்த புள்ளெமாதிரி அண்ணேன். நம்ம குரு நீங்கதானேண்ணேன்.

ர : டாக்டர்! பார்த்திங்களா? நானு அவனுக்கு அண்ணன், மாமன், அப்பன், குரு, இவ்வளவு பந்துவுமாயிட்டேன். ஒரே அறை கொடுத்ததிலே.

[வந்தவனைப் பார்த்து]

போடா! டே! போடா!

[அவன் தள்ளாடி நடந்துகொண்டே]

வ : டே! நம்ம குருகிட்ட எவனாச்சும் வாலாட்டினா. தீத்துப்பூடுவேண்டா, தீத்துப்பூடுவேன். அண்ணேன்! நான் போயிட்டு வர்ரேன். தெரியாம அடிச்சிவிட்டேன் கோபிச்சிக்காதேண்ணேன்.

[போகிறான்.]

ர : ஒருதடவை டாக்டர், ஒரு டிராமாவிலே, புத்தர் கதை காட்டினாங்க. புத்தரு பெரிய ராஜா பிள்ளெ அல்லவா. சுக-