பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓர் இரவு

109


[ஜெகவீரன் பேசமுடியவில்லை. வாய்க்கட்டை அவிழ்த்துக்கொண்டு]

ஜெ : அப்பா! சேகர்! படம் உன் கைக்கு வந்துவிட்டது. சுசீலா உனக்கேதான். என் உயிரைக் காப்பாற்று. இவனை மறைத்து விடலாம். என் தோட்டத்துக்குப் பக்கத்திலே ஒரு அகழி இருக்கிறது. அதிலே போட்டுவிடலாம்.

சே : என் உத்தம நண்பனைக் கொலை செய்த உன்னையா விடுவேன். முடியாது.

ஜெ : (காலில் வீழ்ந்து) நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் சேகர் என்னைக் காப்பாற்று.

சே : சொல்கிறபடி கேட்கிறாயா?

ஜெ : கேட்கிறேன்.

சே : சரி! காகிதம் எடு. நான் சொல்கிறபடி எழுது.

[ஜெகவீரன் காகிதம் எடுத்து எழுத முயற்சிக்கிறான். கை நடுக்கம். எழுத முடியவில்லை. சேகர் எழுதுகிறான்.]

சே : இதிலே கையெழுத்துப் போடு.

ஜெ : என்னப்பா எழுதியிருக்கிறாய்?

சே : படிக்கிறேன் கேள்.

"நான் இன்றிரவு, வியாபார சம்பந்தமாக என்னிடம் பேசவந்த ரத்தினம் என்பவனைக் குடிவெறியால், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டேன்."

போடு கையெழுத்து. நீ, என் விஷயமாகவோ, சுசீலா விஷயமாகவோ, தேவர் விஷயமாகவோ ஏதாவது கேடு செய்ய நினைத்தால், இது சர்க்காரிடம் போய்ச் சேரும். நல்லபடி நடந்துகொண்டால், தப்பித்துக் கொள்ளலாம்.

சே : சேகர்! கையெழுத்தான பிறகு என்னைக்....

சே : காட்டிக்கொடுக்க மாட்டேன். போடு.

ஜெ : (போடுகிறான் கையெழுத்து.)

சே : உட்கார் நாற்காலியில்!

[கண்களைக் கட்டி வாயில் துணி அடைத்து. ஜெமீன்தாரரை நாற்காலியோடு சேர்த்துக் கட்டிவிட்டு, ஒருவிநாடி கழித்து ரத்னத்தைத் தொட அவன் சந்தடியின்றி எழுந்திருக்கிறான். இருவரும் வெளியே செல்கின்றனர்.]