பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 அறிஞர் அண்ணா காட்சி - 3 இடம்:- மற்றோர் மாளிகை. இருப்போல்- தாய், சிறுமி (தாய், சற்று சோகமாகக் காணப்படுகிறாள். சிறுமி அவளிடம் வந்து, கைபிடித்து இழுத்து...] சிறுமி : அம்மா! மாடிக்குப் போகலாம் வாம்மா. சந்தமாமாவைப் பார்க்கலாம், வா! தாய் : கோதி ! தொல்லை கொடுக்காதே. எனக்கு உடம்பு சரியில்லை. சிறுமி : போம்மா. புளுகு. நேத்து நீயே சொன்னாயே, மாடி யிலே போயி நிலாவைப் பார்த்துகிட்டே இருந்தா ரொம்பச் சந்தோஷமா இருக்கும்னு. அப்பாகூட சிரிச்சாங்களே. இன்னக்கி மட்டும் நிலா அழகா இல்லையா? தாய் (குழந்தையை மார்புறத் தழுவிக்கொண்டு) கண்ணல்லவா! எனக்கு இன்று நிலவு பிடிக்கலே. நீ மட்டும் வேண்டுமானா போய் மாடியிலே விளையாடு கண்ணு. சிறுமி : மாட்டேன் போ. நான் கூப்பிட்டா வருவாயா? அப்பா கூப்பிட்டா வருவே.வரட்டும். வரட்டும், அப்பா கிட்டச் சொல்றேன். தாய் அப்பா! நல்ல அப்பா! நிலா எவ்வளவு அழகாக இருந்தா அவருக்கு என்ன? அந்தந்தக் குடும்பத்திலே. ஆனந்தமாக இருக்கிறாங்க. அவருக்கு ஏதடி கண்ணே அதிலே நினைப்பு. அவர் இன்னேரம் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ! சிறுமி .எங்கேம்மா போனாரு அப்பா? ஏம்மா இன்னும் வரலே?. தாய் (பெருமூச்சுடன்) அவரா? அவருக்குத்தான் அந்தப் பாவி ராஜு, சொக்குப்பொடி போட்டுவிட்டானே. அலைகிறார். அவன் கூடச் சேர்ந்துகொண்டு.