பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 அறிஞர் அண்ணா தான் நான் பத்து வின் டிக்கட் எடுக்கப்போறேன். கோ : என்னமோ சார். நானும் உங்களைத்தான் மலைபோல நம்பி, நாட்டிமெயிட் மேலே கட்டிப் பார்க்கிறேன். பு: கட்டுங்க சார், பயப்படாமே. ரா: கோபால்! எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேணும். தக்தீர் ஜெயிக்கும் என்று எனக்குச் சொன்னது யார் தெரியுமா? நம்ம ஜம்பு. பு: யார் அந்த ஜம்பு? ரா : என்ன சார்! ஜம்புலிங்கத்தைத் தெரியாதவங்க யார் சார் ரேஸ்கோர்சிலே, இருக்காங்க. பெரிய ஆள் சார் ஜம்பு. ரேஸ் கோர்சிலே, டீ ஷரப் இல்லே, அதுகூட நம்ம ஜம்பு மச்சானுடையதுதான். பு : ஓ! அப்படின்னா அந்த ஆசாமி சொல்லறதும் சரியாத்தானே இருக்கும். நமக்குச் சொன்ன ஆசாமியும் சரியான ஆள்; ஜாக்கி ஜான்சன். ரா : அதனாலேதான். தக்தீர், நாட்டிமெயிட் இரண்டு குதிரை மேலேயும் 'சுட்டி ஆடணும். அதுதான் சரி. பு: ஆமாம்! ஜோசியர் குப்பு சாஸ்திரி, ஒரு சூக்ஷமம் சொன்னார். குதிரைகள் ரவுண்டுக்கு வருகிறபோது, உன்னிப்பாக் கவனிக்கணும். எந்தக் குதிரை வலது பக்கமா அடிக்கடி திரும்பிப் பார்க்குதோ, அதன்மேலே கட்டணும்; கட்டாயம் ஜெயம் கிடைக்கும் என்று சொன்னார். ரா : அப்படியானா, மூணு குதிரை மேலேயா பணம் கட்டணும்? கோ: மொத்தம் எத்தனை குதிரை ஓடும்சார் அந்த் ரவுண்டிலே? ரா: ஒன்பது. பு: பேஷ்! ஒன்பதுக்கு மூணு, மும்மூணு ஒன்பது, கணக்குச் சரியா இருக்கு சார். ஆமாம் சார்! மற்ற ரவுண்டுகளுக்கு? ரா: வேறே ஏதேதோ பார்த்து வைத்திருக்கிறோம்.