பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு 15 ரா : ஜூலாவா? அது இதுவரை பிளேஸ்கூட அடித்ததில்லையே சார். பு:நாட்டிமெயிட் கூடத்தான். என்னவோ, அதுதான் நம்ம செலக்ஷன்.நான் வர்ரேன் சார். (போகிறார்.) ராஜு : நாட்டிமெயிட் நல்ல குதிரைதான். அரபி தேசத்தது. ஆகாகான்கூட அதை விலைக்கு வாங்கணும்னு பிரயத்தனப்பட்டாராம். முடியலை. கோ: என்ன நிறம்? ரா:சுருப்பு. கோ : அப்படியானா கட்டாயம் ஜெயிக்கும் ராஜு, நாளைக்குச் சனிக்கிழமை..சனிபகவான் கருப்பு, அவர் வாகனம் காக்கை, அதுவும் கருப்பு, குதிரையும் அதே நிறம். கட்டாயம் ஜெயிக்கும். ரா : நான் காலையிலே சந்திக்கிறேன். வீட்டுக்குப் போ. இன்னேரம் உன் சம்சாரம் என்னைத்தான் கண்டபடி பேசி இருப்பாங்க.[ராஜுபோகிறான்.] [கோபால் குதிரைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டு மயங்கினவன் போலச் செல்கிறான். எதிரே ஒரு ஆங்கிலோ இந்தியப்பெண் வருவதைக் கவனியாமல், மோதிக் கொள்கிறான். அப்போதும் ரேஸ் கவனமாகவே இருந்ததால்....] கோ : நாட்டி மெயிட் ஆங்கிலோ இந்திய மாது:- [கோபமாக] பிளடி பூல் (Bloody Fool). ராஜு : சாரி, எக்ஸ்குயூஸ்மீ லேடி. (இப்படிக் கூறிவிட்டுச் செல்கிறான்: வழியில் ரேஸ் புத்தகத்தைப் பார்க்க, அதிலே நாலாவது ரேசில் பிளடிபூல் என்ற குதிரை ஓடுவது குறிப்பிடப்பட்டிருக்கவே, தக்தீர், நாட்டி மெயிட், பிளடி பூல் என்று கூறிக்கொண்டே வீடு நோக்கி நடக்கிறான்.]